11
(குறிப்பு: வன்முறை அதிகம். தவிர்க்க விரும்புவோர் தவிர்க்க.)
கார் செண்பகத்தின் வீட்டை அடைந்த போது மணி நான்கு.
காரிலிருந்து இறங்கிய செண்பகம் ராசாத்தி இருவரையும் பார்த்த பால்காரம்மா மலர்ந்தார்.
“கண்ணு வந்துட்டியா? எங்க தங்கம் போனே? நான் பயந்துட்டேன்.”
சொன்ன பால்காரம்மா அப்பொழுதுதான் பாயைப் பார்த்தார்.
குழப்பமாக பார்த்தவரிடம் பாய் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“அம்மா என் பேர் ஹாஜா. நான் ஒரு ரவுடி. என் மேல எட்டு கேஸ் இருக்கு.”
சொன்னபடி இரு கையெடுத்துக் கும்பிட்டவர் மீது மரியாதைதான் தோன்றியது பால்காரம்மாவிற்கு.
பதிலுக்கு கும்பிட்டார்.
செண்பகம் அவரிடம் சொன்னாள்.
“இந்தண்ணாதான் என்னைக் காப்பாத்தினார்.”
“அப்படியா கண்ணு? அய்யா நீங்க என்ன சொன்னீங்க? ரவுடின்னா? இல்லங்கய்யா நீங்க கடவுள்.”
“அய்யோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்கம்மா. ஆமா இந்தக் குழந்தைகளுக்கு இங்க என்னம்மா நடக்குது?”
பாய் கேட்க பால்காரம்மா ஆற்றாமையுடன் அனைத்தும் சொன்னார்.
எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்ட பாய் சொன்னார்.
“அம்மா என் தங்கச்சி ஃபாத்திமா ஒரு ஹோம் நடத்தறா. இந்த ரெண்டு குழந்தைகளும் அங்க இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுது. ஸ்கூல்ல படிக்க வெச்சுடுவோம். பாய் பின்னறது கூடை முடையறது ஒயர் பின்னறதுன்னு ஏதாவது செய்யக் கூடிய வேலை மட்டும் இருக்கும். நல்ல சாப்பாடு பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம். நான் அட்ரஸ் தரேன். நீங்க நேரா போய் பார்த்துட்டு உங்க மனசுக்கு சரின்னா அங்க சேர்த்து விட்டுடுங்க. அதுவரைக்கும் ரெண்டு குழந்தைகளும் உங்க பாதுகாப்பில இருக்கட்டும். என்ன சொல்றீங்கம்மா?”
பாய் சொன்னதைக் கேட்டு பால்காரம்மா மலர்ந்தார்.
“அப்படியே ஆகட்டும் அய்யா. ஆனா?”
“ஆனா என்ன சொல்லுங்கம்மா.”
“இந்தப் பொண்ணுங்களோட சித்தி ஒரு பஜாரி. “
“அது பத்திக் கவலைப்படாதீங்க. நீங்க ஒண்ணு பண்ணுங்க.”
“சொல்லுங்கய்யா”
“குழந்தைகளக் கூப்பிட்டு உங்க வீட்டுக்குப் போக முடியுமா?”
பாய் கேட்க பால்காரம்மா புரிந்துகொண்டார். புன்னகைத்தார்.
“அய்யா”
“சொல்லுங்கம்மா”
“அந்த கடவுள் தான் உங்கள இங்க அனுப்பிருக்கார்.”
பாய் புன்னகைத்தார்.
பால்காரம்மா குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு போய்விட பாய் அன்வர் சலீம் மூவரும் செண்பகத்தின் வீட்டின் கதவைத் தட்டினர்.
“யாரு?” உள்ளிருந்து காளிங்கன் குரல் கொடுத்தான்.
“நான் தான்” என்றார் பாய்
“நான் தான்னா யார்? பேர் இல்லையா?” என்றபடி கதவைத் திறந்தான் காளிங்கன்.
அவனைத் தள்ளிக்கொண்டு மூவரும் உள்ளே நுழைந்தனர்.
“உன் பேரென்ன?” பாய் கேட்க காளிங்கன் ஆத்திரமானான்.
“நீ யாருய்யா?” கேட்ட காளிங்கன் வாய் மூடவில்லை. சலீம் அவனை ஓங்கி அறைந்தான். காளிங்கன் நிலைகுலைந்தான்.
“என்ன தலை சுத்துதா? என் ஆளுங்க அப்படி. நான் என்ன பண்ண? நான் சொல்லாமலே அடிப்பானுங்க. சொன்னேன்னு வை. பிரிச்சு மேய்ஞ்சிடுவானுங்க. இப்ப சொல்லு உன் பேரென்ன?”
கேட்ட பாயை காளிங்கன் பயமாய் பார்த்தான்.
“காளிங்கன்.”
“நீதான் வீட்டுக்கு புதுசா வந்தவனா?”
“ஆமா”
“உன்னோட அக்காவும் அவ புருஷனும் எங்க இருக்காங்க?”
“ரூம்ல”
“இந்த நேரம் என்னடா பண்றாங்க? இன்னுமா தினவெடுக்குது அவங்களுக்கு? போய் இழுத்துட்டு வாங்கடா. “
பாய் சொல்ல அன்வர் சலீம் இருவரும் சின்னான் அறைக் கதவைத் தட்டினர்.
“என்ன காளிங்கா கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?” கேட்டபடி கதவைத்திறந்த அன்னம்மாள் அதிர்ந்தாள்.
“யார் நீங்க? “
சின்னன் பின்னாலேயே வர அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான். பாய் முன் போட்டான்.
பாய் அவனையே இகழ்ச்சியாகப் பார்த்தார்.
“செண்பகம் யார் உனக்கு?”
“பொண்ணு”
“ராசாத்தி?”
“அதும் பொண்ணுதான்.”
“ம் அவங்க ரெண்டு பேரும் எங்க?”
“இங்கதான்”
“என்ன?”
“இங்கதான் எங்கயோ இருப்பாங்க.”
சொன்ன சின்னான் வாயை மூடவில்லை. பாய் அறைந்த அறையில் அவன் பல் உடைந்தது.
சின்னான் அடிபட்ட நாயைப் போல் அலறினான்.
“ஏண்டா நீ அப்பாவா? தங்கம் மாதிரி ரெண்டு பொண்ணுங்க வீட்ல இருக்காங்க. அவங்க மேல என்னிக்காவது உனக்கு அக்கறை இருந்திருக்கா?
ரயில்ல அடிபட்டு செத்திருப்பாடா உன் பொண்ணு. எனக்கு உயிரே போயிடுச்சு.”
பாய் சொல்ல சின்னான் கண்களில் பதட்டம் ஒன்றும் இல்லாமல் சாதாரணமாகப் பார்த்தான்
“அன்வர்”
“பாய்”
“இவனுக்கு பொண்ணுங்க மேல பாசம் இல்லை. எப்பவுமே இவனுக்கு எந்திரிச்சுட்டே இருக்கும் போல.
இவனை என்ன பண்ணலாம்?”
“போட்றலாமா பாய்?”
“நீ வேற. ஆ ஊ ன்னா கொலை பண்ணலாம்னு.”
“அப்ப என்ன பாய் பண்ணலாம்?”
“இவனோட ரெண்டு காலையும் விரிச்சு ரெண்டு காலுக்கு நடுவுல ஓங்கி மிதி. இவனுக்கு இனிமே எப்பவுமே எந்திரிக்கக் கூடாது.”
பாய் சொல்ல சின்னான் பதறினான்.
“வேண்டாம் என்ன விட்டுடுங்க” கத்தினான்.
“ஏண்டா … தா பொண்ணு ரயிலில் அடிபட்டு சாக இருந்ததுன்னு சொல்லும்போது சாதாரணமா இருந்த. இப்ப உனக்கு ஒண்ணுன்னா கத்தறே. நீ கத்து. கேட்டுக்கறேன்.”
சொன்ன பாய் அன்வரிடம் திரும்பினார்.
“மிதிச்சிடு”
அன்வர் சின்னான் இரு கால்களையும் விரித்தான். சின்னான் அலறியதை சட்டை செய்யாமல் இரண்டு கால்களுக்கும் நடுவில் ஓங்கி மிதித்தான். கொஞ்சம் சந்தேகமாக பார்த்தவன் மீண்டும் மிதித்தான். சின்னான் வலி பொறுக்க முடியாமல் துடித்தான்.
அன்வர் பாயிடம் திரும்பி சொன்னான்.
“இவன் அவ்வளவுதான் பாய் உயிருள்ள பொணம்.”
“சூப்பர். “
“யாருடா நீங்கல்லாம்? உங்கள சும்மா விடமாட்டேன்?” அன்னம்மாள் ஆங்காரமாகக் கத்த பாய் சிரித்தார்.
“அன்வர்”
“சொல்லுங்க பாய்”
“நீ ஒண்ணு பண்ணனும்”
“சொல்லுங்க பாய் பண்ணிடலாம்.”
“காளிங்கன் ஒரு குழந்தை கிட்ட தப்பா நடக்கப் பார்த்திருக்கிறான். இன்னொரு குழந்தைய விக்க ஏற்பாடு பண்ணி இருக்கான். நல்லா யோசிச்சுப் பாத்தேன்.காளிங்கன் இந்த பூமியிலே இருக்கணும்னு அவசியம் இல்ல. அவனை முடிச்சுடு”.
“டேய்ய்ய்ய்”
பாய் சொல்ல அன்னம்மாள் உச்சமாய் அலறினாள். ஆத்திரமான சலீம் அன்னம்மாளை எட்டி உதைக்க அலறியவள் எகிறிப்போய் விழுந்தாள்.
“சலீம்” பாய் அழைத்தார்.
“பாய்”
“அவசரப்படாத”
“முடியல பாய். உங்களை எப்படி டேய்ய்னு சொல்லலாம் இந்த தேவிடியா?”
“பொம்பளைங்களுக்கு மரியாதை கொடுத்து பேசு.”
“அவ பொம்பள இல்ல பாய்.”
ஒன்றும் சொல்லாமல் பெருமூச்சு விட்டவர் அன்வரைப் பார்த்தார்
“நீ முடிச்சிடு அன்வர். எதுக்குக் காத்துட்டிருக்கே?”
சரி பாய் அன்வர் காளிங்கனை நெருங்கினான்.
“அன்வர்”
“பாய்”
“அவன சட்டுன்னு கொன்னுடாத”
“சரி பாய்”
அன்வர் காளிங்கனின் வலது கையைப பிடித்து முறுக்கினான். வலி பொறுக்க முடியாமல் காளிங்கன் அலறினான்.
“என்னை விட்டுடுங்க. அக்கா என்ன விடச் சொல்லுக்கா.”
காளிங்கன் அலற அன்னம்மாள் ஆவேசமானாள். எழ முயன்றாள். முடியவில்லை.
கத்தினாள்
“அந்த செண்பகத்துக்கும் ராசாத்திக்கும் நான்தான் எமன்”
காளிங்கனின் இரண்டு கைகளையும் உடைத்த அன்வர் அவன் அடி வயிற்றில் ஓங்கி மிதித்தான்.
உள்ளே பிரளயம் நடந்தாற் போல் வலி உடலெங்கும் பரவியது.
அன்வர் அவன் முகத்தில் ஓங்கி மிதித்தான். மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. கத்தியை எடுத்தான் அன்வர். காளிங்கன் பயந்து நடுங்கிய படி தீனமாய் அலறினான். கண்டுகொள்ளாத அன்வர் காளிங்கனின் கழுத்தை கரகரவென்று அறுத்தான். ரத்தம் பீறிட்டு வெளியில் வந்தது. காளிங்கன் துடித்தான்.
“இன்னும் கொஞ்ச நேரம் தான் பாய் முடிஞ்சிடும்” அன்வர் சொல்ல பாய் புன்னகைத்தார்.
“பாய்”
“சொல்லு அன்வர்.”
“இந்த பொம்பளைய என்ன பண்றது?”
“ஏன்?”
“இல்லை இதுவரைக்கும் நாம பொம்பளைங்கள தொல்ல பண்ணதில்ல.”
“ம்”
“அதான் ஒரு குழப்பம்.”
“என்ன பண்ணனும்?”
“போட்றட்டா பாய்?”
“நீ வேற.”
“அப்ப விட்றலாமா பாய்?”
“இவ ரெண்டு குழந்தைகளுக்கும் பண்ண துரோகத்துக்கு விடமுடியுமா அன்வர்? அது மட்டும் இல்ல இவள உயிரோட விட்டா ரெண்டு குழந்தைகளையும் பழி வாங்க முயற்சி பண்ணுவா”
“அப்ப என்ன பாய் பண்றது?”
“அவளுக்கு அனுமதி கொடு”
“புரியல”
“அவளே தூக்கு மாட்டி சாகறதுக்கு அவளுக்கு அனுமதி கொடு”
பாய் சொல்ல அன்வர் புன்னகைத்தான்.
“அவ மாட்டிக்கலன்னா?”
“கத்தியை எடுத்த கண்டபடி குத்து. துடிச்சு சாகட்டும்.”
அன்வர் அன்னம்மாவை நெருங்கினான்.
“பாய் சொன்னது கேட்டேதானே? நீயா தூக்கு மாட்டி சாவு. இல்லன்னா துடிச்சு சாக வேண்டியிருக்கும்.”
அன்வர் சொல்ல பாயை வெறியோடு பார்த்த அன்னம்மாள் கத்தினாள்.
“டேய் எத்தனை ஜென்மம் ஆனாலும் சரி உன்னைப் பழி தீர்க்காம போகமாட்டேன். உன்னையும் அந்த ரெண்டு மூதேவிங்களையும் கொல்வேன்டா “
அவளை அடிக்கப் பாய்ந்த சலீமிடம்
“வேண்டாம் சலீம்” பாய் கத்தினார்.
அன்னம்மாள் ஒரு சேலையை உத்திரத்தில் கட்டினாள். மறுமுனையை முடிச்சிட்டாள். ஸ்டூல் மேல் ஏறி நின்று முடிச்சை தன் கழுத்தில் நுழைத்தாள். ஸ்டூலை எட்டி உதைத்தாள். தொங்கினாள். கழுத்தெலும்பு உடைபட சுவாசம் தடைபட்டது. மரணவலி உடம்பு மொத்தமும் பரவ மொத்த வெறியையும் கண்களுக்குள் தேக்கி பாயைப் பார்த்தாள்
“நான் உன்னை திரும்ப பார்ப்பேன்டா”
நினைத்தவள் விழிகள் நிலைத்தன.
தொடரும்