Monday, December 23, 2024
Google search engine
HomeHorrorலவ் யூ ஜெனி 4

லவ் யூ ஜெனி 4

லவ் யூ ஜெனி 4

ஜெனி காலையில் எழும்போது அந்த மணத்தை உணர்ந்தாள். பரபரப்பானாள். சட்டென்று பெட்டில் இருந்து இறங்கி அறையில் பார்த்தாள். கதவைத் திறந்து வெளியில் வந்து பார்த்தாள்.

“பாலா எனக்கு தெரியும் நிச்சயமா எனக்கு தெரியும். நீ வந்திருக்கே. ஏன் பாலா என் முன்னாடி வரல? என்னப் பார்க்க பிடிக்கலையா? பாலா”  தனக்குள் புலம்பியபடி எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்தாள். 

ஏதோ நினைத்துக் கொண்டவளாய் மீண்டும் அறைக்கு ஓடினாள். 

தன் டைரியைப் பார்க்க அது திறந்திருந்தது.  அதில் பாலாவின் வரிகள். என்றோ அவன் அவள் டைரியில் எழுதியவை.

“அன்பிற்கு எதுவும் தடையில்லை.

இதை அன்பிற்குரியோர் மட்டுமே அறிவர்”

இந்த பேஜ் திறந்திருக்குன்னா பாலா இங்க வந்துட்டு போயிருக்கான்.

ஜெனி கண்களில் கண்ணீர் வழிந்தது. பேனாவை எடுத்து எழுதினாள்.

எப்படி பாலா இருக்கே? என்னாச்சு பாலா உனக்கு? நிஜமாவே ஃபயர் ஆக்சிடென்ட்லதான் செத்தியா? உன்னோட உலகம் எப்படி பாலா இருக்கு? என்னையும் முடிஞ்சா கூட்டிட்டுப் போ பாலா. நீ இல்லாம என்னால இங்க இருக்க முடியல.

அவள் கடைசி வரியை எழுதும்போது காற்று வேகமாக அடித்தது. அறையில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்பட்டன. ஜெனி பயமாய் உணர்ந்தாள். யாரோ எங்கோ கதறி அழுவது போல் அவளுக்கு அழுகை சத்தம் கேட்டது. அவள் சத்தம் வந்த திசை நோக்கிப் பார்க்க முயன்று முடியாமல் காற்றின் வேகத்தில் செலுத்தப்பட்டாள். டைரி அவள் கையில் இருந்து எங்கோ பறந்தது. சுவரில் மோதி கீழே விழுந்த டைரியை ஜெனி பாய்ந்து போய் எடுக்க அவள் எழுதிய பக்கம் கிழிக்கப்பட்டிருந்தது.

ஜெனிக்கு ஒன்றும் புரியவில்லை.

என்ன எழுதினாள் என்று யோசித்தாள்.

என்னையும் கூட்டிட்டுப் போ என்னால இங்க இருக்க முடியல.

அவளுக்கு பாலாவின் கோபம் எதற்கு என்று புரிந்து கொள்ள முடிந்தது. அவள் செத்துப் போவதை அவன் விரும்பவில்லை.  அவன் பாசம் அவளை  நெகிழ வைத்தது. 

நீண்ட நேரமாக யோசித்தவள் மனம் அமைதியாகாமல் அறையை விட்டு வெளியே வந்தாள். 

அப்போது கார் வந்து நிற்க உள்ளே இருந்து இறங்கினான் ஜான்.

“ஹாய்”

“ம்”

“சட்டுனு கிளம்பு “ சொன்னவனிடம் கேட்டாள்.

“எங்கே?”

“எங்க கம்பெனி மேனேஜரோட பர்த்டே பார்ட்டி .”

“அதுக்கு நான் எதுக்கு வரணும்?”

“வாட் ஆர் யூ டாக்கிங் ? ஐ அம் கோயிங் டு மேரி யூ.”

“ஸோ..?”

“என்னோட சர்க்கிள் உனக்கு தெரியணும் என்னோட சர்க்கிளுக்கு உன்னத் தெரியணும்”

“ஜான் இந்த மாதிரி விஷயங்களை நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் வெச்சுக்கலாம் இப்ப வேண்டாம் ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ “ ஜெனி சொல்ல ஜான் கேட்டான்.

‘சரி அங்க வேண்டாம் வேற எங்காவது போலாம் வா “

“இல்ல ஜான் இன்னிக்கி எனக்கு மூடு சரியில்ல ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ”

“அதச்சொல்லு முதல்ல. என் கூட எங்கயும் வரப் பிடிக்கல. அதனால என்னென்னமோ கதை சொல்ற. கரெக்டா ?”

“நான் அப்படி மீன் பண்ணல ஜான்”

“இது ஒன்னு தெரிஞ்சு வச்சிருக்க ஏதாவது சொல்லிட்டு அப்படி மீன் பண்ணல இப்படி மீன் பண்ணலன்னு. நீ எப்படி மீன் பண்றேன்னு  எனக்கு தெரியும் . சொல்றத சொல்லிட்டு அதுக்கப்புறம் சப்பைக்கட்டு கட்டாத”

சொன்ன ஜான் அவளை சட்டை செய்யாமல் காரில் ஏறினான். காருக்குள் இருந்து வந்த மனோரஞ்சித மணம் அவனைத் திகைக்க வைத்தது.

“இது என்ன புது ஸ்மெல் ? எப்படி இது காருக்குள்ள ?” 

யோசித்தவன் ஸ்டியரிங்கைத் திருப்ப தேவைக்கும் அதிகமாகவே கார் திரும்பி அவன் அதிர்ந்து சுதாரிப்பதற்குள் கார் கேட் மீது டொம் என்று மோதியது. முன்பக்க கண்ணாடி ச்சலீர் என்று நொறுங்கி ஜான் மீது தெறிக்க அவன் பயந்து அலறினான்.

அவன் அலறல் சத்தம் கேட்டு டேனியல் வெளியே வந்தார். பதறினார்.

“ஜான் என்னாச்சு?” 

அவர் கத்த கார் அவரை நோக்கி திரும்பியது. ஜானுக்கு ஒன்றும் புரியவில்லை. கதவைத் திறக்க முயற்சித்தான். முடியவில்லை. எதார்த்தமாக ஸ்பீடா மீட்டர் பார்த்தவன் அதிர்ந்தான். யாரோ ஆக்சிலேட்டரை வெறித்தனமாக அழுத்துவது போல் தோன்றியது அவனுக்கு.  உள்ளே இருந்தபடி டேனியலை நோக்கி கத்தினான்.

“உள்ள போயிடுங்க ஆபத்து” ஆனால் டேனியலுக்கு ஒன்றும் கேட்கவில்லை.

கார் மிக அதிக வேகத்தில் டேனியலை நோக்கி சிறியது. எகிரி குதித்து தப்பிக்க முயற்சி செய்தும் டேனியல் கடுமையாய் மொத்தப்பட்டார். கார் மோதிய வேகத்தில் வானில் பறந்து தரையில மிக வேகத்தில் மோதி மோசமாய் அடிபட்டு கதறித் துடித்தார்.

ஜெனி வேகமாய் வந்து டேனியலைத் தூக்க முயல முடியவில்லை.

சட்டென்று எல்லாம் ஓய்ந்தது போல் ஜானுக்குத் தோன்ற கார் கதவை திறக்கப் பார்த்தான். திறந்தது. பதட்டமாய் இறங்கியவன் ஜெனியிடம் வந்து கேட்டான்.

“அங்கிள் ஓகேவா?”

கேட்டவனை முறைத்த ஜெனி “கார் ஓட்டத் தெரியாதா உனக்கு? பைத்தியக்காரனைப் போல கார் ஓட்டி கேட் மேல மோதியிருக்கே அப்பா மேல மோதியிருக்கே. ஜஸ்ட் கெட் அவுட் “ சீறினாள்.

“ஜெனி ப்ளீஸ் ஆக்சுவலா என்ன நடந்ததுன்னா…” ஜான் பழட்டமாய் சொல்ல முயற்சி செய்ய ஜெனி மீண்டும் கத்தினாள்.

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் நான் எதுவும் உன்கிட்ட கேட்க விரும்பல வெளிய போ”

***

அமாவாசை இரவு.

முனியன் தன் மனைவிக்குத் தெரியாமல் ரகசியமாக தான் வைத்திருக்கும் கள்ளக்காதலியை கொஞ்சினான்.

“ஆயிரம்தான் சொல்லு. உன்ன அடிச்சுக்க எவளாலயும் முடியாது “

“அப்படி நான் என்ன ஸ்பெஷல்?”

“உன்கிட்ட எல்லாமே ஸ்பெஷல் தான். ஒவ்வொன்னா சொல்லவா?” அவன் கேட்க அவள் ம் என்றாள்.

“ஃபர்ஸ்ட் பாதம். பாதத்தப் பார்த்தா மீதத்தைப் பார்க்க தோணனும் அதுதான் பொண்ணு. ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் நான் உன்னோட பாதத்தப் பார்த்தேன். அப்புறம் ஒரு நாள் சேலை கட்டிட்டு கணுக்கால் தெரியுற மாதிரி நடந்து போயிட்டிருந்தே . யார் இந்த பொண்ணுன்னு ரகசியமாக கவனிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் நம்ம பங்காளியோட பொண்டாட்டின்னு தெரிஞ்சது. பங்காளியோட ரொம்ப க்ளோஸ் ஆனேன். எதுக்கு? பங்கு போடத்தான்.  அப்புறம் ஒவ்வொரு நாள் ஒவ்வொண்ணு  பார்த்து பார்த்து ரசிச்சிட்டு இருப்பேன். பளிச்சுன்னு தெரியற இடுப்பு அப்படியே மேலப் பார்த்தா சொர்க்கத்துக்கு கூட்டிட்டுப் போற மது கிண்ணங்கள் மாதிரி ரெண்டு…”

“சீ”

“அப்பெல்லாம் ரொம்ப நாள் தவிப்பா இருக்கும். ஒரு நாள் கூட நைட் நான் முழுசா தூங்குனது இல்ல. டெய்லி நான் தூங்காம வேலைக்கு போனதால எங்க முதலாளி என்கிட்ட என்ன விஷயம்னு கேட்டார்.”

“யாரு டேனியல் அய்யாவா?”

“ம் நான் ஃபர்ஸ்ட் ஒன்னும் சொல்லல ஆனா அவர் என்ன சொல்ல வச்சுட்டார்”

“என்ன சொன்னீங்க?”

“வெளிப்படையா சொன்னேன் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா அதே நேரத்துல எப்பவுமே புருஷன் கூடவே இருக்கான் என்ன பண்றதுன்னு தெரியலன்னு சொன்னேன்.”

“அடப்பாவி அப்படியே சொல்லிட்டியா?”

“ம்”

“அப்புறம் என்ன ஆச்சு?”

“எங்க டேனியல் ஐயா உன்னோட புருஷனோட முதலாளி கிட்ட பேசி அவன லோடு எடுத்துட்டு அடிக்கடி வெளியூர் போக வச்சுட்டார். நாமளும் எந்த பிரச்னையும் இல்லாம பார்த்துக்கறோம் “

“இப்பல்லாம் எனக்கு பயமாவும் இருக்கு”

“ஏன்?எதுக்கு பயம்? நான் இருக்கேனே”

“எப்பவுமே தப்பான விஷயம் தப்பு தானே?”

“எல்லாமே நம்ம மனசப் பொறுத்தது. இன்னிக்கு உனக்கு தப்புன்னு தெரியறது நாளைக்கு சரின்னு தெரியும். அப்ப என்ன பண்ணுவே? ஐயையோ ஒண்ணும் செய்யாமப் போயிட்டோம்னு வருத்தப்படுவியா? வாழ்க்கையில சந்தோஷமா இருக்கணும். அதுதான் முக்கியம். சரி தப்புன்னு பார்த்திட்டிருக்கிறது என்னைப் பொறுத்த வரைக்கும் தேவையில்லாத விஷயம் “

“நல்லாப் பேசறீங்க”

“பேச்சு மட்டும் தானா?” கேட்டபடி அவளை அணைத்தான்.

“பேசவும் செய்றீங்க” என்று அவள் சிரிக்க முனியன் வெறியானான்.

“கொஞ்சம் நிதானமா இருங்க” அவள் கெஞ்ச அவனுக்கு இன்னும் வெறியேறியது. 

“இந்த முடிச்சை எப்படி கழட்டறது?” கேட்டவன் கைகளால் முனைந்து முடியாமல் தன் பல்லால் முயற்சி செய்ய அப்போது அவன் மீசை அவள் இடையில் இடையூறு செய்ய அவள் கிளர்ந்தாள். அவனை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள்.

அவன் அவள் மேல் காதல் போர் தொடுத்தான். அவள் வெற்றி பெற அவன் மகிழ்ந்தான். ஆவேசமான கொஞ்சல்கள் முடிந்த பின்னான அமைதியான தருணம். அவன் எழுந்தான்.

எங்கே என்று கேட்டாள அவள் தன் விழிகளால் .

“என் வீட்டிற்கு போக வேண்டாமா?”

“எதுக்கு? இங்கயே தங்கிடுங்களேன் “ அவள் சொல்ல சிரித்தான்.

“எனக்கும் ஆசையாத்தான் இருக்கு ஆனா என்ன பண்றது சில நேரங்களில் சில சூழ்நிலைகள் சில சந்தர்ப்பங்கள் “

“ புரியுது “

“நாளைக்கு வரட்டா?”

“அவர் டூட்டிக்கு கிளம்பினா போன் பண்றேன் “

“ ம்”

முனியன் வெளியே வந்தான் . கும்மிருட்டு அவனை பயமுறுத்தியது. அவனே அவனை தைரியப்படுத்திக் கொண்டான். நடந்தான். சற்று தூரம் நடக்க ஒரு புதிய வாசனை அவன் மூக்கை நிரடியது.

‘இது என்ன வாசனை இப்படி வித்தியாசமா இருக்கு’ 

யோசித்தவன் எதார்த்தமாக பார்க்க ஒரு மெல்லிய வெளிச்சம் வழியில் நின்றது போல் உணர்ந்தான். பதட்டமானான். தன்னிடமிருந்த லைட்டரைப் பொருத்தி வெளிச்சம் உண்டாக்கி மீண்டும் பார்த்தான்.

அது ஒரு மெல்லிய வெளிச்சம். முனியன் திகைத்தான். அதைக் கடக்காமல் செல்ல முடியாது ஆனால் அது என்னவென்று தெரியவில்லை.

என்ன செய்யலாம் யோசித்தவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல நடந்தான். அந்த வெளிச்சத்தின் அருகில் சென்றவன் எக்கச்சக்கமாய் அதிர்ந்தான்.

கரும்புகையின் நடுவே அது பாலாவின் முகம். மார்புப் பகுதியில் சிகப்பாய் ரத்தம் கொட்டியது. 

பாலா தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு அழுதான். முனியனுக்கு வியர்த்தது. 

“ முனியா” பாலா அழைக்க முனியன் நடுங்கினான்.

எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியாமல் பயத்துடன் பார்த்தான்.

“ முனியா… வலிக்குது முனியா… எனக்கு வலிக்குது முனியா “ பாவமாய் அழுதபடி சொன்ன பாலா சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு உக்கிரமாய் முறைத்தான்.

ஆபத்து ஓடிவிடு என்று முனியனின் மூளை அவனை எச்சரிக்கை செய்ய அங்கிருந்து ஓட முயன்றான். ஆனால் ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியவில்லை. மனோரஞ்சிதப் பூவின் மணம் மிகத் தீவிரமாக அவனை சூழ்ந்தது.

“என்னைத் தயவு செஞ்சு விட்டுடு” முனியன் கதறக்கதற பாலா கண்டு கொள்ளாமல் அவனை தலைகீழாய் திருப்பி தலையை தூக்கி நிலத்தில் ஓங்கி அடித்தான். முனியனின் தலை நான்கு துண்டுகளாய் சிதறியது. ரத்தம் தெறித்தது. துடித்த முனியனின் உடலை ஆவேசமாய் பார்த்தான் பாலா. நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த கோட்டான் ஒன்று பயமாய்  அலறியது. 

தொடரும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

error: Content is protected !!