செல்வியின் போட்டோவைப் பார்த்த எனக்கு அதிர்ச்சியானது. என் அப்பாவைக் கொன்றது செல்விதான். எதற்கு? தெரியாது.
அப்பாவிற்கு ஏதோ தெரிந்திருக்கிறது அதனால் தான் எப்படியாவது என்னையும் அழைத்துக் கொண்டு இந்த ஊரை விட்டு தப்பித்து விட வேண்டும் என்று யோசித்திருக்கிறார். அப்படி என்றால் செல்வியின் இறப்பிற்கு காரணம் அப்பாவா? இல்லை இருக்காது. என் அப்பா நல்லவர். நல்லவர் தானா? பிறகு ஏன் அவருக்கு பயம்? அவருக்கு தெரிந்ததை இனி அவரிடம் கேட்டுப் பெற இயலாது. ஏனென்றால் அவர் இறந்துவிட்டார். மீதம் இருப்பது இவர் மட்டும்தான். இவரிடம் என்ன ஆனது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டு ?
இந்தக் கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது தெரிந்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
என் அப்பா அங்கே இறந்து கிடக்கிறார். நான் இங்கே ஒளந்து கொண்டிருக்கிறேன். என் விதியை நினைத்தால் எனக்கே கோபமாக வந்தது. மிகச் சிறுவயதில் என் அம்மாவை இழந்த பின் என் அப்பா தான் எனக்கு எல்லாமாக இருந்தார். மற்ற அப்பாக்கள் எல்லாம் கண்டித்தால் என் அப்பா கண்டிக்க மாட்டார். எதையும் காரண காரியத்துடன் விளக்குவார். அவர் தன்மையாக சொல்வதே மீண்டும் எந்த ஒரு தவறையும் செய்யத் தோன்றாமல் செய்துவிடும்.
கதவை திறந்தது. அவர் உள்ளே வந்தார்.
“என்ன ரமேஷ் எப்படி இருக்கே?”
“என்ன தயவு செஞ்சு எங்க அப்பாகிட்ட கூட்டிட்டுப் போங்க சார்”
“புரிஞ்சுதான் பேசறியா?”
“அந்த செல்வி என்னையும் கொலை பண்ணட்டும் சார்”
“என்ன சொல்ற?”
“நான் சின்ன வயசுல இருந்து எந்தத் தப்பும் பண்ணல சார். ஒரு தப்பும் பண்ணாம வாழற என்னை அந்த செல்வி எதுக்கு சார் கொலை பண்ணனும்?”
நான் கேட்க அவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார் பின் மெதுவாகச் சொன்னார்.
“அதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கு நீ பரந்தாமனோட பையன்”
எனக்கு ஆத்திரமாக வந்தது. அப்படி என்ன செய்து விட்டார் என் அப்பா இந்த செல்விக்கு?
“சார்”
“ம்”
“எங்க அப்பா அப்படி என்ன சார் பண்ணிட்டார்?”
“என்ன பண்ணல?”
“சார்”
“உனக்கு தெரியாம உங்க அப்பாக்கு இன்னொரு முகம் இருக்கு. தெரிஞ்சுக்கறியா?”
***
“மாமா”
அன்பு நிமிர்ந்து பார்க்க செல்வி தட்டில் எதையோ வைத்து நீட்டினாள்.
“என்ன செல்வி ?”
“சுவரொட்டி மாமா”
“நீ சாப்பிடு உனக்குத்தான் ரொம்ப நல்லது. ரத்தம் நல்லா ஊறும்” அன்பு சொன்னதைக் காதில் கேட்ட பரமேஸ்வரி நெகிழ்ந்தாள்.
இவங்க ரெண்டு பேரும் பேசறத வச்சு பார்க்கும்போது ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப பிடிச்சிருக்கு போல.
கடவுள் புண்ணியத்துல ரெண்டு பேருக்கும் சீக்கிரமா நல்லது நடத்திப் பார்த்திடணும்.
அவள் எண்ணும் போது அவள் கணவன் குணசேகரன் உள்ளே வந்தான். அன்பு எழுந்து நிற்க அவனைப் பார்வையில் வாங்கிய குணசேகரன் ஆச்சரியப்பட்டான்.
“நீ எப்ப மாப்பிள்ளை வந்தே?”
“இப்பதான் மாமா”
“சரி கை கழுவு சாப்பிடலாம்”
“மாமா” அழைத்த அன்பு தயங்கினான். அவன் தயக்கம் குணசேகரனுக்குப் புதிதாக இருக்க
“என்ன மாப்பிள்ள ஆடு திருடன் மாதிரி முழிக்கிற? என்ன விஷயம்? ஏதாவது உதவி வேணுமா?” அருகில் வந்து கேட்டான்.
“அதில்ல மாமா”
“வேற என்ன மாப்பிள்ள? சொல்லு என்ன வேணும்?”
தன்னை குணசேகரன் பாசமாய் பார்த்தபடி கேட்க அன்பு தயங்கினான்.
“மாப்பிள்ள இன்னிக்கு நீ சரியில்ல. முதல்ல சாப்பிடு. அப்புறம் எதுவா இருந்தாலும் கேளு தர்றேன்”
“நிச்சயமாக கொடுப்பீங்களா மாமா ?”
“ம்”
“அப்ப நான் ஒண்ணே ஒண்ணு கேக்கறேன். தப்பா நினைக்க மாட்டீங்களே?”
“கேளு மாப்பிள்ள”
“செல்விய நான் கல்யாணம் பண்ணிக்கவா?”
அன்பு ஒரு வழியாக கேட்க பரமேஸ்வரி சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். கணவன் என்ன சொல்லப் போகிறானோ என்று அவன் மீது பார்வையை திருப்பினாள்.
செல்வி அப்பாவையே பார்த்தாள். குணசேகரன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான். பின் சத்தமாக சிரித்தான்.
“மாப்பிள்ள இதைக் கேக்கறதுக்குத் தான் இவ்வளவு தூரம் தயங்கினியா? அவ உனக்குத்தான் மாப்பிள்ள. அவளுக்கும் உன்னத்தானே புடிச்சிருக்கு? அப்புறம் வேற யார் போய் அவளை கல்யாணம் பண்ணிக்குவாங்க உன்னைத் தவிர?”
குணசேகரன் சொல்ல செல்வி நெகிழ்ந்தாள்.
“அப்பா” அழைத்தபடி அருகில் நின்று வணங்க குணசேகரன் பாசமாய் சொன்னான்.
“சந்தோசமா இரு கண்ணு. நீ என்னோட குலசாமி. உன்ன சங்கடப்படுத்த என்னால முடியுமா?”
நடந்ததெல்லாம் பார்த்த பரமேஸ்வரிக்கு கணவனை இழுத்து மடியில் போட்டு கொஞ்ச வேண்டும் போல் தோன்றியது. மகிழ்வாய் அவனைப் பார்த்தாள்.
“என்ன பரமு உன்கிட்ட கேட்காம சொல்லிட்டேன் சம்மதம் தானே?” குணசேகரன் கேட்க புன்னகையுடன் பரமேஸ்வரி தலையசைத்தாள்.
“சம்மதம்”
“அன்பு”
“சொல்லுங்க மாமா”
“முதல்ல கை கழுவிட்டு வா சாப்பிடலாம்”
“சரி மாமா”
***
தென்னந்தோப்பில் குயில் எங்கோ கூலியது அன்பு செல்வி இருவருக்கும் கேட்டது.
“என்ன மாமா ஒரு வழியா எங்க அப்பாவை கரெக்ட் பண்ணிட்டே போல” செல்வி அவனை சீண்ட அவன் சிரித்தான்.
“அவர்கிட்ட இந்த விஷயமா பேசும் போது எனக்கு எவ்வளவு தயக்கமா இருந்துச்சு தெரியுமா? ஒரு மாதிரி இருந்துச்சு அப்புறம் எப்படி இருந்தாலும் நான் தான சொல்லணும்னு சொல்லிட்டேன்”
சொன்னவன் முகத்தை அருகில் வந்து செல்வி பார்க்க அன்பு கண்களால் என்னவென்று கேட்டான்.
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா”
“ம்”
“என்ன ஒரு முறை கட்டிக்க” செல்வி சொல்ல அன்பு அவளை பாசமாய் பார்த்தான். சட்டென்று அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான். அவள் இதமும் அவளின் இயல்பான சுகந்தமும் அவனைத் தடுமாற வைத்தன. இளமை விழித்துக் கொண்டு அவளை மொத்தமாக வேண்டும் என்று அவனைத் தவிக்க வைத்தது. அந்தத் தவிப்பை எப்படி போக்க என்று அவனும் அறிந்திடாமல் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான். உருகி நின்ற பெண் அவள் எதிர்ப்பொன்றும் காட்டாமல் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டாள்.
அவன் இதழ்கள் அவள் இதழ்களுடன் உரசும்போது மெலிதாய் இதமாய் தீப் பற்றியது. முத்தத்திற்கும் முத்தம்தானே மருந்து. இதழ்களில் ஏற்பட்ட தீ அணைய இருவரின் இதழ்களும் நீண்ட நேரம் அணைத்துக் கொண்டன. அன்பு செல்வியை விடுவிக்க அவள் கேள்வியாய் பார்த்தாள்.
“ஏன்?”
“இதுக்கு மேல என்னால முடியாது”
“ஏன்?”
“இப்பவே வேணும் போல இருக்கு”
“எடுத்துக்க”
“சம்மதமா?”
“ம்”
“வேண்டாம்”
“ஏன்?”
“எனக்கு நிறைய கற்பனை இருக்கு”
“என்ன மாமா அப்படி கற்பனை?”
“நமக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் தான் இது நடக்கணும்”
“ம்”
“நான் உன்னை தொடறப்ப நீ படற வெட்கத்தை நான் பார்த்து ரசிக்கணும்”
“அது கஷ்டம் மாமா முடியாது”
“ஏன்?”
“உன்கிட்ட எனக்கு வெட்கமே வராது மாமா” செல்வி சொல்ல அன்பு சிரித்தான்.
“அடப்பாவி ஏன் அப்படி ?”
“சின்ன வயசுல இருந்து உன்ன நெனச்சா ஏதோ ஒரு தனி பாசம் தான் வரும். வேற எதுவும் தோணாது. நீ எனக்கு நான் உனக்கு அவ்வளவு தான்”
செல்வி சொல்ல அன்பு நெகிழ்ந்தான்.
“செல்வி”
“சொல்லுங்க மாமா”
“ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டே தானே?”
“கேளு மாமா”
“இப்ப நான் திடீர்னு செத்துப்போயிட்டா என்ன பண்ணுவே?”
அன்பு கேட்க செல்வியின் முகம் மாறியது. சட்டென்று அன்புவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். அவன் நம்ப முடியாமல் பார்க்க
“பேசறதுக்கு வேற விஷயமா இல்ல? எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே வந்து நீ செத்துப் போய்டுவேன்னு சொல்ற?”
“நான் விளையாட்டுக்கு…” அன்புவை செல்வி முடிக்க விடவில்லை.
“எதுல விளையாடறதுன்னு அறிவில்ல ? தூ சொல்லு. துப்பு”
“என்னடி இதெல்லாமா நீ நம்பறே?”
“தூ சொல்லு முதல்ல”
“தூ”
“இனிமே எப்பவுமே இப்படி பேசக்கூடாது தெரியுதா ?”
“சரி தாயே இப்படி இனிமே பேச மாட்டேன் ஓகே வா” அவன் கன்னத்தைத் தடவியபடி செல்ல செல்விக்கு மனம் கனத்தது. அவனை இறுக்கி கட்டிக்கொண்டு தான் அடித்த கன்னத்திற்கு முத்தம் கொடுத்தாள்.
அன்பு புன்னகைத்தான்.
“என்ன மாமா ?”
“நீ இப்படி கிஸ் பண்ணுவேன்னு தெரிஞ்சா உன்கிட்ட எத்தனை அடி வேண்டுமானாலும் வாங்கலாம் போல”
“ச்சீ”
“செல்வி”
“சொல்லுங்க மாமா”
“சீக்கிரமா உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு”
“பண்ணிக்க”
“எப்பவுமே உன்னை மடியில வச்சு கொஞ்சணும் போல இருக்கு”
“கொஞ்சிக்க”
“அடுத்த மாசம் லீவ் கேட்டுப் பார்க்கறேன். மாமா கிட்ட பேசிட்டு முடிஞ்சா அடுத்த மாசமே நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்”
“சரி மாமா” சொன்ன செல்வியின் முகம் சோகமாக மாற அதை கவனித்த அன்பு கேட்டான்.
“என்னாச்சு செல்வி ?”
“இன்னிக்கு நீ கிளம்பிடுவேல்ல ?”
“ம்”
“எத்தனை மணிக்கு பஸ் ?”
“நைட் 11 மணிக்கு”
“பத்திரமா போயிட்டு வா மாமா”
“ஓகே டி தங்கம்” சொன்னவன் மெலிதாகப் புன்னகைத்தான்.
“ஏன் மாமா?”
“நான் என்ன குழந்தையா ?”
“எனக்கு நீ எப்பவுமே குழந்தைதான் மாமா “ செல்வி சொல்ல நெகிழ்ந்தான்.
“செல்வி”
“சொல்லுங்க மாமா”
“பஸ் ஏறினதுக்கப்புறம் உன்கிட்ட பேசுனது எல்லாமே திரும்ப யோசிச்சுப் பார்த்துட்டுருப்பேன். எத்தனை முறை யோசிப்பேன்னு எனக்கே தெரியாது .திரும்பத்திரும்ப உன்னைப்பத்தி நீ பேசுனது நீ சிரிச்சது இப்படியே தான் யோசிச்சிட்டு போவேன்”
“ம்”
“நான் வரட்டுமா?”
“சரி மாமா”
***
சார்பதிவாளர் அலுவலகம்.
அன்பு தன் சீட்டில் அமர்ந்தான்.
“என்ன அன்பு சார் மூஞ்சியில ஒரே சந்தோஷம்? ஏதாவது குட் நியூஸா?”
பக்கத்து சீட் பரிமளா கேட்க புன்னகையுடன் பதில் சொன்னான்.
“ஆமாங்க எங்க மாமா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டார்”
“சூப்பர் அப்ப எல்லாருக்கும் கேக் உண்டு”
“பிரியாணியே வாங்கித்தரேன்”
“செம அன்பு சார்”
“ம்”
“உங்களுக்கு அவங்கள ரொம்பப் பிடிக்குமா?”
“என்னோட வாழ்க்கையே அவங்கதான்”
“அவங்களுக்கு …?”
கேட்ட பரிமளாவிற்கு பதில் ஒன்றும் சொல்லாமல் அன்பு புன்னகைத்தான். அவன் மனதில் செல்வி ஓங்கி அறைந்த அறை நினைவிற்கு வந்தது.
அப்போது
அட்டெண்டர் உள்ளே வந்தார்.
“அன்பு சார்”
“சொல்லுங்க”
“உங்களப் பார்க்கறதுக்காக ஒருத்தர் வந்து வெயிட் பண்றார்”
“பேர் எதுவும் சொன்னாரா?”
“நான் கேக்கல சார். கேட்டுட்டு வரவா?”
“ம்”
வெளியே போன அட்டெண்டர் மீண்டும் உள்ளே வந்தார்.
“அன்பு சார்”
“ம்”
“அவர் பேர் பரந்தாமன்”
தொடரும்