விக்ரம் தளர்ந்தான். தன் அப்பார்ட்மெண்ட்டின் அறையைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான். நீளமான காரிடாரில் நடந்து, மாடிப்படி இறங்கி, அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு சீறினான். குரோம்பேட்டையில் இருந்து ஒரு 'யூ' டர்ன் அடித்து, ஒரு 'எஸ்' வடிவ சாலையில் பயணித்து, மெயின் ரோட்டில் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டிருக்கும் வாகன நெரிசலில் கலந்து, நுங்கம்பாக்கத்தில், ஒரு ஒதுக்குப்புறமான ரெஸ்டாரண்டில் வண்டியை நிறுத்தினான். கண்ணாடி கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான். வழக்கமான சர்வர் டிப்ஸ் பெற்ற - பெறப் போகிற - விசுவாசத்தில் புன்னகைத்தான். தனியான தடுப்பு அறையில் நுழைந்து அமர்ந்தான். செல் போனை எடுத்ததும், "எத்தனை முறை விக்ரம் போன் பண்றது? ஏன் எடுக்கலை?" என்று நீரஜா அலுத்துக் கொண்டாள். பல முறை போன் செய்து ஓய்ந்திருந்த கோபம் அவள் குரலில் தெரிந்தது.
"பைக்ல வந்துட்டிருந்தேன் நீரஜா. அதான் எடுக்க முடியலை."
சர்வர் வந்து நின்றான். விக்ரம் போனில் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தான். ஆனால் விக்ரம் அவனைப் பார்த்து, "கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் கூப்பிடுறேன்." என்றான். போனில், "இங்க சர்வர் கிட்ட பேசறேன்." என்றான்.
"ரெஸ்டாரன்ட் வந்துட்டியா?" என்றாள் நீரஜா.
"ஆமாம்."
"வர்றியா?"
"வர்றேன். நீ அவனுக்கு போன் பண்ணியா?"
"சுவிட்ச் ஆப்னு வருது. போனை ஆப் பண்ணி வச்சுருக்கான்."
"சுவிட்ச் ஆப்னு வருதா? என்ன அர்த்தம் அதுக்கு?"
"தெரியலை. நீ வா, நேர்ல பேசலாம்."
"சரி, வர்றேன். வெயிட் பண்ணு."
"வா!" என்று வைத்தான். சர்வரை அழைத்தான்.
"சொல்லுங்க, சார்." என்று பணிவாக வந்து நின்றான் சர்வர்.
"இன்னும் கொஞ்ச நேரமாகும். அதுவரைக்கும் ஒரு லெமன் ஜூஸ் குடிக்கலாம்னு இருக்கேன்.
"சரி சார், கொண்டு வர்றேன்." என்று சர்வர் அகன்றான். விக்ரம் யோசித்தான். போன் ஏன் சுவிட்ச் ஆப் செய்து வைத்திருக்கிறான்? ஒருவேளை போனை அனைத்து வைத்து விட்டு கலெக்டர் மீட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறானோ , என்னவோ! என்று கிண்டலாக மனதுக்குள் சிரித்துக் கொண்டான். சர்வர் லெமன் ஜூஸை ஒரு ட்ரேயில் வைத்து எடுத்து வந்து டேபிள் மேல் வைத்து விட்டு நின்றான்.
"சார், நான் வெளியே இருக்கேன். உங்களுக்கு தேவைப்படும் போது கூப்பிடுங்க, வர்றேன்.'' என்று வெளியேறினான்.
விக்ரம் எலுமிச்சை பானத்தை அருந்தும் போது சர்வர் முகம் தேவையில்லாமல் மனதில் தோன்றியது. துணுக்குற்றான்.
நீரஜாவையும் என்னையும் இந்த ரெஸ்டாரண்டில் அடிக்கடி பார்க்கும் நபர்களில் சர்வரும் ஒருவன். சில சமயங்களில் தனி அறையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும் போது அவன் பார்த்திருக்கிறான். எங்கள் இருவரையும் ஒன்றாக பார்த்தால் நிச்சயம் கணவன் மனைவி என்று நினைக்க முடியாது. எங்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தை முதன்முதலாக பார்ப்பவர்கள் மட்டுமானால் கணவன் மனைவி என்று நினைக்கலாம். ஆனால், தொடர்ந்து எங்களை கவனிப்பவர்களுக்கு தெரிந்து விடும், நீரஜா வேறு ஒருவனின் மனைவி என்று. அதற்கு காரணம் மிகையான அந்நியோன்யம். எந்த கணவன் மனைவியும் பொது இடங்களில் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி நெருக்கமாக இருக்க முடியாது. இருக்க மாட்டார்கள்.
அடுத்து, இந்த சர்வர் தொடர்ந்து எங்களைக் கவனித்து வருகிறான். பல நாள் கவனித்ததில் எங்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும். பிளாக்மெயில் செய்பவன் இந்த சர்வராக ஏன் இருக்கக் கூடாது?
இப்படி எல்லாம் யோசித்த விக்ரம் அந்த எண்ணத்தை மெகா சைஸ் ரப்பரால் தேய்த்து அழித்தான்.
எங்கள் இரண்டு பேரின் நம்பரும் அவனுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை.
புளிப்பும் இனிப்புமான லெமன் ஜூஸ் தொண்டையில் குளிர்ச்சியாக இறங்கி ஒரு தெம்பைக் கொடுத்தது.
பத்து நிமிடத்துக்குள்ளாக நீரஜா வந்தாள். ஜீன்சும் பனியனுமாக எடுப்பாக இருந்தாள். நிச்சயம் அந்த ரெஸ்டாரண்டில் பத்து பேருக்காவது மூச்சு முட்டி இருக்கும். பத்து பேரும் பத்து தடவையாவது திரும்பிப் பார்த்திருப்பார்கள். சர்வர் சொல்ல நேராக அந்த சிறிய தடுப்பு அறையில் நுழைந்தவள், "எனக்கு ஒரு காபி போதும்!" என்றாள். சர்வர் விலகியதும் சன்னமான குரலில், "சொல்ல விக்ரம்!" என்றாள். "மறுபடியும் அவன் நம்பருக்கு போன் பண்ணி பார்த்தியா?"
"இல்லை, நீரஜா. இப்போ ட்ரை பண்ணி பார்க்கலாம்." என்று மீண்டும் அந்த அனாமதேய நபரின் எண்ணை அழுத்தி விட்டு காத்திருந்தான்.
அது மீண்டும் கம்ப்யூட்டர் குரலில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தது.
"என்ன விக்ரம்?"
"சுவிட்ச் ஆஃப்!"
"சரி, என்ன செய்யலாம்? அவன் நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் போன் பண்ணி பேசறவனாய் இருந்தால் பிரச்சனை இல்லை, விக்ரம். சுவாமிக்கும் போன் பண்றான். அது தான் இப்போ பிரச்சனை. நான் இல்லாத போது ஒண்ணு கிடக்க ஒண்ணு பேசித் தொலைச்சான்னா ரொம்ப சிக்கலாயிடும். என் வாழ்க்கையை இன்னும் சிக்கலாக்கிக்க எனக்கு விருப்பம் இல்லை. இதுக்கு உடனே ஏதாவது முடிவு பண்ணி ஆகணும்."
"எனக்கு புரியுது நீரஜா. அவனுடைய போன் ஆன்ல இருந்தா தானே? அவன் தான் சுவிட்ச் ஆப் பண்ணி வெச்சி இருக்கானே? இப்போ அவனா போன் பண்ற வரைக்கும் நாம காத்துக்கிட்டு தான் இருக்கணும்."
சர்வர் காபி எடுத்து வந்து வைத்தான். சர்வர் வருவதில் இருந்து இயல்பாகவும் எச்சரிக்கையாகவும் அவனைக் கவனித்தான் விக்ரம்.
சர்வர் தன் வேலையின் பொறுப்பை உணர்ந்தவனாக இருந்தான். அவன், தன் கவனம் முழுவதையும் ஒருங்கிணைத்து கட்டுப்பாடுடன், பணிவுடன் செயல்பட்டான். நுகர்வோரின் எந்த ஒரு சிறு முகச்சுளிப்புக்கும் ஆளாகாமல், பொருத்திக் கொண்ட இயந்திர புன்னகை மாறாமல், வந்ததும் தெரியாமல் காபி கோப்பையை வைத்ததும் தெரியாமல் விலகினான்.
விக்ரம் சந்தேகப் பட்டியலில் இருந்த சர்வரின் ஒரே பெயரையும் நீக்கினான். அவன் மனம் உள்ளுக்குள் படுவேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. இவன் இல்லை; வேறு யார்?
நீரஜா அமைதியாக காபியின் முதல் உறிஞ்சலை முடித்து விட்டு, "சரி, விக்ரம்! எனக்கு கொடுத்த அதிக சுதந்திரத்தை நான் அடிக்கடி பயன்படுத்தினால் சுவாமிக்கு சந்தேகம் வந்துடும். அதனால நாம சந்திக்கிறதை கொஞ்சம் குறைச்சுக்கலாம்." என்றாள்.
விக்ரம் சிரித்தான். பல்வரிசை ஒழுங்காக, பளீரென்று அழகாக இருந்தது.
"இப்ப எதுக்கு சிரிக்கிற விக்ரம்?"
மீண்டும் சிரித்தான். நீரஜா அவனைப் பொய்யாய் கன்னத்தில் அடித்தாள்.
"இன்னைக்கு பார், ஆபீசுக்கு போன ஜடம் பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துடுச்சு!"
"சந்தேகப்பட்டாரா?"
"இல்லை. வேறு ஏதோ, யாரோ ஒருத்தன் செத்துப் போனதுக்கு போய்ட்டு குளிச்சிட்டு போக வீட்டுக்கு வந்துட்டார்."
"தற்செயலா தானே வந்தார்?"
"ஆமாம். இருந்தாலும் இந்த பிரச்சனை நம்ம ரெண்டு பேரையும் தாண்டி வேற மூணாவதா ஒருத்தனுக்கு தெரிஞ்சிருக்கு. அதனால நாம மீட் பண்றதை குறைச்சுக்கலாம்னு சொல்றேன். மறுபடியும் சிரிச்சே உதைபடப் போறே நீ!"
"இல்லை சிரிக்கலை. குறைச்சுக்கலாம்னு சொல்றியே, உன்னால முடியுமா, சொல்லு?"
"முடியாதுதான். ஆனா, முடியணும்."
"நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?"
"இல்லை, சொல்லு!"
"நீ ஏன் சுவாமிநாதனை டிவோர்ஸ் பண்ணிட்டு என் கூட வரக்கூடாது? அப்படி வந்துட்டா நாம யாருக்கும் பயப்பட வேணாம்; இல்லையா?"
நீரஜா மௌனமாக இருந்தாள்.
"யோசித்துப் பார், நீரஜா! உன்னோட அந்தஸ்துக்கு நான் பனை மரத்துக்குக் கீழே செடி முளைச்ச மாதிரி தான்! ஆனா ஒருத்தரோட சந்தோசத்தை பணமும் அந்தஸ்தும் முடிவு பண்றது இல்லை. உனக்கும் எனக்கும் 200% ஒத்துப் போகுது. என்ன சொல்ற?"
"நான் கொஞ்சம் யோசிக்கணும் விக்ரம்."
விக்ரம் தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். ஒரு மெல்லிய பெருமூச்சு விட்டபடி, " என் மனசுல தோணுச்சு; கேட்டுட்டேன் நீரஜா. நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழறதுக்கு நம்ம கிட்ட கொஞ்சம் பணம் இருந்தா போதும். உன்னுடைய சொத்துக்காகவோ, பணத்துக்காகவோ நான் ஆசைப்படலை. அதை நீ தெளிவா புரிஞ்சுக்கணும். யோசிச்சு சொல்லு!" என்றான்.
"சுவாமி இதுக்கு ஒத்துக்கணுமே விக்ரம்? கோர்ட்டு கேசுன்னு போனா அவரை விட்டு விலகுறதுக்கு சரியான காரணம் சொல்லணும்." நீரஜா தன் கைகளின் தங்க வளையல்களை பார்த்துக் கொண்டே பேசினாள்.
"பெட்ரூம்ல திருப்தி இல்லைங்கிற ஒரு காரணம் போதாதா நீரஜா? அதுதானே உண்மையும் கூட?"
விக்ரம் அவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே பேசினான். கோவில் வாசலில் அமர்ந்து, வருவோர் போவோரின் கைகளையே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரனின் பார்வை போல் இல்லை, அவன் பார்வை; தேன் கூட்டை ஆர்வமுடன், ஆசையுடன் சுவைக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நரியின் பார்வை போல் இருந்தது.
இப்போது, நீரஜாவின் செல்போனில் வந்து விழுந்தது ஒரு குறுஞ்செய்தி!
"விக்ரமை நம்பாதே!"

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 3
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.