"சார்" குரல் கேட்ட ராகவ் நிமிர்ந்தான். பியூன் சுந்தரம் நின்றிருந்தார்.
"யெஸ்"
"உங்களை எம்டி கூப்பிட்டார்*
சுந்தரம் சொல்ல ராகவ் எழுந்தான்.
காரிடாரில் நடந்தவன் பித்தளை போர்டு இருந்த அறைக்கு முன்பாக நின்று விரல்களால் கதவைத தட்ட உள்ளே இருந்து "கம்மின்" என்ற குரல் கேட்டது.
ராகவ் உள்ளே நுழைய எம்டி பரந்தாமன் புன்னகைத்தார்.
"குட் மார்னிங் சார்"
"யெஸ் ராகவ் உட்காருங்க"
"சார் நீங்க என்னை கூப்பிட்டதா.."
"ஆமா"
"சொல்லுங்க சார்"
"நாம சண்டிகட்ல புது ப்ரான்ச் ஒண்ணு ஓபன் பண்ணப்போறோம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்"
"யெஸ் சார் தெரியும்"
"அங்க நேராப் போய் ஆரம்பகட்ட வேலை எப்படி இருக்குன்னு பார்த்து ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணனும். அது நீங்க பண்ணா நல்லா இருக்கும்னு என்னோட பர்சனல் ஃபீல். நீங்க என்ன சொல்றீங்க? "
எம் டி கேட்க ராகவ் தனக்குள் மகிழ்ந்தான். அதே நேரம் இப்பொழுது தன் சூழல் சரியில்லை என்பதையும் அவன் உணர்ந்தான்.
சந்தியாவை விவாகரத்து செய்துவிட்டு புனிதாவை மணந்து கொண்டபின் அங்கேயே வேலை மாற்றம் கிடைத்தாலும் போய்விடலாம். ஆனால் இன்னும் ஒன்றும் சரியாக செட்டாகவில்லை. இப்பொழுது எப்படி என்ற யோசனை அவன் முகத்தில் வெளிப்பட எம் டி அதைக் கவனித்தார். கேட்டார்.
"உங்களுக்கு ஏதாவது தயக்கம் இருந்தா வெளிப்படையா சொல்லலாம்"
"தயக்கம் இல்லை சார் ஆனால் ஒரு சின்ன டவுட்"
"யெஸ் ப்ளீஸ்"
"இந்த வேலைக்கு நான் மட்டும்தான் போகணுமா அல்லது என் கூட யாராவது வருவாங்களான்னு…"
"யெஸ் நீங்களும் மணி சுந்தரும் போலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு எதுவும் சாய்ஸ் இருக்கா?"
எம் டி கேட்க ராகவ் மனதிற்குள் யோசனை. வெளிப்படையாகக் கேட்டான்.
"சார்"
"யெஸ் ப்ளீஸ்"
"புனிதா கூட வந்தா பெட்டர்னு ஃபீல் பண்றேன் சார்"
கேட்டவனைப் பார்த்த எம்டி புன்னகைத்தார்.
"அவங்க லேடி ஆச்சே. அவ்வளவு தூரம் வருவாங்களா?"
"வருவாங்க சார்"
"வெல். அவங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லைன்னா எங்களுக்கும் இல்லை. நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வரலாம்"
"தேங்க்யூ சார்"
ராகவ் தன் சேம்பருக்கு வந்தான். மனம் உற்சாகத்தில் பரபரத்தது.
புனிதாவை அழைத்து சென்றால் இரவுகள் இனிக்கும்.
காலையில் என்னிடம் அவள் சரியாகப் பேசவில்லை. ஏதாவது மூட் அவுட்டாக இருக்கும். ஒரு அழுத்தமான முத்தத்தில் அவள் இயல்பாகி விடுவாள்.
ராகவவிற்கு புனிதாவை நினைத்து பெருமையாக இருந்தது.
ஒரு திருமணமாகாத பெண் திருமணமான தன் மேல் ஏதோ ஒரு நம்பிக்கை வைத்து எல்லாவற்றையும் தருகிறாள். எப்பொழுது கேட்டாலும் மறுக்காமல் தருகிறாள். அதுவே என்னை அவள் பால் ஈர்த்து விட்டது. ஆரம்பத்தில் நான் அவள் பால் இப்படி ஈர்க்கப்படவில்லை என்பது தான் உண்மை.
அவளின் அபாயகரமான வளைவுகளைப் பார்த்துப் பார்த்து ரசித்த என்னை இரவின் தீ எரித்ததுண்டு. எங்கே முழுக்க பொசுங்கி விடுவேனோ என்று எனக்குள் அச்சம். இதற்கு மேல் முடியாது என்று நிலைக்கு நான் தள்ளப்பட ஒரு நாள் அவளிடம் என் காதலைத் தெரிவித்தேன்.
முடியாது என்று போக்கு காட்டினாள். அவள் விழிகளில் என்னை அவளுக்குப் பிடித்ததை நான் அறிந்தேன்.
திட்டம் போட்டேன் சில நேரங்களில் பிடித்த பெண்ணை அடைவதற்கு சாமர்த்தியம் தேவைப்படும் நேர்மை சில நேரங்களில் தோற்றுவிடும் சாமர்த்தியம் எப்பொழுதும் வெல்லும். அவள் இல்லாவிட்டால் என் வாழ்க்கை பொருளற்ற ஒன்று என்றேன். என் முகபாவனையும் இதமாக என் நிலையை நான் எடுத்துரைத்த தன்மையும் அவளை அசைத்துப் பார்க்க நான் விடாப்பிடியாக அவளைப் பற்றிக் கொண்டேன்.
அவள் அறையில் தங்க நேர்ந்த ஒரு நாள் அவள் எனக்குத் தேவைப்பட்டாள். அவள் விரும்பியதை பேசினேன். அவள் பேசியதை விரும்பினேன். ஒரு பெண்ணை கூடலுக்குத் தயாராக்குவது மிக எளிதான ஒன்று. அவள் பேசுவதை காது கொடுத்து கேட்டால் போதும். புனிதா மனதில் அவளுக்கு நான் காவலன் ஆனேன். அவளைப் பற்றி அவள் அனைத்தும் சொன்னாள். சில தருணங்களில் அவள் கதைசோகமாக இருக்க நான் கிடைத்த பாலில் சிக்சர் அடிக்காமல் இருந்ததில்லை. அவளுக்கு ஆறுதல் சொல்வது போல் அவளை அணைத்துக் கொண்டேன். விடுபட முயல்கிறாளா என்று என் விழிகள் உன்னிப்பாய் பார்க்க அவள் தன் இரு விழிகள் மூடி மயங்கி இருப்பதைக் கண்டு என் மனம் துள்ளியது. அன்றுதான் புனிதா முதன்முதலில் என் வசமானாள்.
அன்றைய இரவு எனக்கு நிறைவானது. அதற்கு அடுத்து வந்த பல தருணங்களில் எங்களுக்கு இயல்பாக தேவைப்படும் போதெல்லாம் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். சில நேரங்களில் அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் நான் அழைத்தேன் என்பதற்காக பகிர்ந்ததும் உண்டு.
என் மனைவி சந்தியாவிடம் இல்லாத ஏதோ ஒன்று புனிதாவிடம் என்னை ஈர்த்தது என்பதை அறிந்த நான் அது என்ன காரணி என்று யோசித்தும் எனக்கு விடை கிடைக்கவில்லை.
சந்தியாவை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. குடும்பத்திற்காக அவள் அனைத்தும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதற்காக அவள் மீது பரிதாபம் உள்ளது. ஆனால் ஒரு பெண்ணைத் தொடுவதற்கு பரிதாபம் செல்லுபடியாகாது. நான் தூண்டப்பட வேண்டும். அப்போதுதான் தொடுதல் இருவருக்கும் இன்பமாக இருக்க முடியும். என் கதையை மேலோட்டமாக பார்க்கும் அனைவரும் நான் ஏதோ வில்லன் போல் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டேன் என்று என்னைத் தூற்றுவர். ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லை என்றால் அவளால் கூடலில் ஈடுபட முடியும் அதே நேரத்தில் ஓர் ஆணுக்கு விருப்பமில்லை என்றால் அவனால் கூடலில் ஈடுபட முடியாது. தன் மீதான ஆர்வம் கணவனுக்குக் குறையாதபடி மனைவி பார்த்துக் கொள்ள வேண்டும். கணவன் தானே என்று அவன் முன் எல்லாவற்றையும் இயல்பாக செய்தால் அவனுக்கு ஆர்வம் எப்படி வரும்? அது மட்டுமல்ல எப்பொழுதும் அழுமூஞ்சியாகவோ அல்லது சிடுமூஞ்சியாகவோ இருக்கும் மனைவிகளை கணவன்கள் விரும்புவதில்லை. என்னை சந்தியா கட்டுப்படுத்துவது எனக்கு பிடிக்காமல் போனது.
தனக்குள் ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்த ராகவ் மணி பார்த்தான்.
உணவு இடைவேளை தொடங்கி இருந்தது.
ராகவ் எழுந்தான். புனிதாவின் சேம்பருக்குச் சென்றான்.
அங்கே அவள் இல்லை. திகைத்தவன் சுற்றுமுற்றும் பார்க்க கொஞ்ச நேரத்தில் புனிதா அங்கே வந்தாள்.
"புனிதா" ராகவ் ஆர்வமாய் அழைத்தான்.
"ம்"
ஏன் இப்படி உம்மென்றிருக்கிறாள்? வழக்கமாக இப்படி இருக்க மாட்டாளே? ஏதோ விஷயம் இருக்கிறது.
ராகவ் அவளை உன்னிப்பாய் பார்த்தான்.
"புனிதா"
"ம்"
"ஏதாவது பிரச்னையா? "
"இல்லையே"
சொன்னவளை தீர்க்கமாய் பார்த்தவன்
"சரி வா சாப்பிடப் போலாம்" அழைத்தான்.
"நீங்க போய் சாப்பிடுங்க" புனிதா அவனுக்கு முக்கியத்துவம் தராதது போல் அவனுக்குத் தோன்றியது.
"நீ சாப்பிடலையா?"
"எனக்குப் பசியில்ல" புனிதா சொல்ல ராகவிற்கு புரிந்தது. இவள் இப்படி பேசுகிறாள் என்றால் ஏதோ சிக்கல். இவள் இப்படியெல்லாம் பேசக்கூடியவள் அல்ல. தானாக பேசுகிறாளா அல்லது வேறு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா என்று தெரியவில்லை?
அவளையே வெறித்தபடி பார்த்தவன் மென்மையான குரலில் கேட்டான்.
"எம்டி ஏதாவது சொன்னாரா?"
"ஒண்ணும் சொல்லலயே. ஏன் கேக்கறீங்க?"
"நம்ம புது யூனிட் சண்டிகர்ல இருக்குல்ல?"
"ஆமா"
"அங்க போய் ஒர்க் அப்சர்வ் பண்ணி ரிப்போர்ட் ரெடி பண்ணி கொடுக்க சொல்லி இருக்கார்." சொன்னவனை புன்னகையுடன் பார்த்தவள்
"பெஸ்ட் விஷ்சஸ்" என்றாள்.
"புனிதா"
"சொல்லுங்க"
"எம் டி நம்ம ரெண்டு பேரைத்தான் போகச்சொல்லி இருக்காரு" சொன்னவனை நம்பாத பார்வை பார்த்த புனிதா மெல்லப் புன்னகைத்தாள்.
"எம் டியே சொன்னாரா?"
"ஆமா"
"என்கிட்ட இதுவரைக்கும் ஒண்ணும் சொல்லல"
"அதான் என்கிட்ட சொல்லிட்டாரே?" கேட்டவனை புன்னகையுடன் பார்த்த புனிதா மெதுவாக அழுத்தமான குரலில் கேட்டாள்.
"உங்க கிட்ட சொன்னா போதுமா? நீங்க எனக்கு யார்?"
அடிபட்டது போல் உணர்ந்த ராகவ் அவளையே பார்க்க அவன் அவனை லட்சியம் செய்யாமல் கம்ப்யூட்டரில் பார்வையைப் பதித்தாள்.
ராகவிற்கு சாப்பிடத் தோன்றவில்லை. புனிதா மீது மிகுந்த கோபம் வந்தது.
வெளியே வந்தவன் பெட்டிக்கடை முன் நின்று சிகரட்டைப் பற்ற வைத்தான்.
உள்ளே கோபம் கொப்பளித்தது.
'என்னடி என்கிட்ட விளையாடறியா? நான் யாருன்னு தெரியுமா? எனக்கு வேணும்னா எந்த எல்லைக்கு வேணாலும் போவேன். எனக்கு வேணாம்னாலும் அதே எல்லைக்குப் போய் அவங்கள அழிக்கவும் தெரியும். பார்க்கறியா?'
அன்று மாலை வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்தவன் வேலை நேரம் முடிந்ததும் புனிதாவின் வருகையை எதிர்பார்த்து வாசலில் நின்றான்.
புனிதா வர அவள் அருகில் சென்றான்.
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" அவன் சொல்ல அவள் ஒன்றும் பேசாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.
வழக்கமாக அவர்கள் செல்லும் ஆர்யாஸ் ஹோட்டலுக்குள் சென்று எதிர் எதிராக அமர்ந்தனர்.
"சொல்லுங்க"
"நீ இன்னிக்கு ஒரு மாதிரியா நடந்துக்கறே?"
"ஆமா"
"காரணம்?"
"நான் வெளிப்படையா சொன்னா நீங்க தப்பா நினைக்கக் கூடாது"
"முதல்ல விஷயம் என்னன்னு சொல்லு"
"தெரிஞ்சோ தெரியாமயோ நாம ரெண்டு பேரும் இவ்வளவு நாள் தப்பு பண்ணிட்டோம். எனக்குத் தப்புன்னு தெரியுது. நான் நிறுத்திக்க ஆசைப்படறேன். நீங்களும் என்னை புரிஞ்சுக்கங்க ப்ளீஸ் "
சொன்னவளை ஒன்றும் பேசாமல் வெறித்தான் ராகவ்.
"என்ன ஒண்ணும் சொல்லாம இருக்கீங்க?"
"எப்ப இருந்து உனக்கு இந்த ஞானோதயம்?" அவன் குரலில் கேலியும் எரிச்சலும் இருக்க புனிதா அவனைப் பார்த்து சொன்னாள்.
"ப்ளீஸ் ராகவ் புரிஞ்சுக்கங்க " அவள் சொல்ல ராகவ் கோபமானான்.
"என்னடி திமிர் மயிரா? இவ்வளவு நாளா படுக்கறப்ப தப்புன்னு தெரியலயா? எனக்கும் சந்தியாவுக்கும் டைவர்ஸ் ஃபைல் பண்ணியாச்சு. உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தே தீரணும். ஏதாவது வில்லங்கமா பண்ணேன்னு வை. நான் மனுசனா இருக்க மாட்டேன்." சொன்னவன் மேற்கொண்டு அவள் சொல்லப் போவதை கேட்க விரும்பாமல் எழுந்து செல்ல அவள் கெஞ்சினாள்.
"ராகவ் ப்ளீஸ்…"
அவன் கண்டுகொள்ளவில்லை.
***
ராகவ் அன்றும் சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்தான். பைக்கை பார்க் செய்து விட்டு வந்தவன் வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துத் திகைத்தான்.
'எங்கே போயிருப்பாள் அதுவும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு?' தனக்குள் யோசித்தவனை அந்த சத்தம் கலைத்தது.
பக்கத்து வீட்டுக்காரர் சண்முகம் நின்றிருந்தார்.
"சார் சாவி என்கிட்ட கொடுத்துட்டுப் போனாங்க."
"தேங்க்ஸ்" சொன்ன ராகவ் சாவியை வாங்கிக் கொண்டு கேட்டான்.
"சந்தியாவும் பிள்ளைங்களும் எங்க போறாங்கன்னு சொல்லிட்டுப் போனாங்களா?"
"ஆமா சார். உங்க வீட்டுக்கு ஏற்கனவே ஒருத்தன் வந்தானே?"
"யாரு?"
"உங்க பொண்டாட்டிய கல்யாணம் பண்ணிக்க போறேன்னு …" அவர் கேட்க ராகவிற்கு உள்ளே எரிச்சல்.
"ஆமா"
"அவன் கூட தான் சார் உங்க பொண்டாட்டி போயிருக்காங்க "