சைக்யாட்ரிஸ்ட் 9
கீழே கதவு உடைக்கப்பட்டுவிட ஆர்த்தியால் மேலே இருக்க முடியவில்லை.
மாடிப்படியில் கீழே இறங்கினாள்.
“ஆர்த்தி நீ எதுக்குமா இங்க வர்றே? மேல போம்மா “ நஞ்சுண்டேஸ்வரா கத்தினார்.
நீரஜ் சிரித்தான்.
“ பாசக்கார அப்பா பொண்ணக் காப்பாத்த முயற்சி பண்றார்” அவன் சொல்ல அவனுடன் வந்தவர்களும் சிரித்தனர். அவனையும் சேர்த்து மொத்தம் ஆறு பேர் இருந்தார்கள்.
“நீரஜ் என்ன கழுத்தறுத்துட்டு போய்ட்டே இருக்கலாமா?” ஒருவன் கத்தியை எடுத்தபடி கேட்க நீரஜ் தலையாட்டினான். நஞ்சுண்டேஸ்வரா அவனைத் திக்கென்று பார்த்தார்.
“வேண்டாம் என் பொண்ணு கர்ப்பமா இருக்கா எதுவும் செஞ்சுடாதீங்க ப்ளீஸ்” அவர் கெஞ்ச நீரஜ் அவரைப் பிடித்துக் கொண்டான்.
“வினோத் நீ போய் அவளை முடிச்சுடு” நீரஜ் சொல்ல வினோத் ஆர்த்தியின் அருகில் செல்ல அவள் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாகப் பார்த்தாள்.
“ஒரு நிமிஷம்” கேட்டாள்.
“என்ன ?”
ஆர்த்தி தன் மொபைல் எடுத்தாள். விஷால் புன்னகைக்கும் போட்டோவைப் பார்த்தாள்.
வினோத்தை பார்த்து நான் தயார் என்பதாகப் பார்த்தாள்.
வினோத் ஆர்த்தியின் கழுத்தில் கத்தியை வைக்க…
“விளையாட நாங்களும் வரலாமா? “ குரல் கேட்டு அனைவரும் வாசலைப் பார்க்க அசோக் புன்னகைத்தான்.
உள்ளே நுழைந்தான். அவனைத் தொடர்ந்து திவ்யா கார்த்தி டேவிட் டாமி உள்ளே வந்தனர்.
அசோக்கைப் பார்த்த ஆர்த்தி மலர்ந்தாள்.
“அட என்ன கண்ணா.. கர்ப்பமா இருக்கிற பொண்ணோட கழுத்துல கத்தியை வச்சு விளையாடிட்டிருக்கே? எடு “ அசோக் சொல்ல நீரஜ் அசோக்கை முறைத்தான்.
“யார் நீ?”
“நாங்க ‘மாஸ் ‘முடிச்சுட்டு ஒரு ட்ரிப் போலாம்னு பிளான் போட்டோம் சரி எங்களுக்கு எப்பவும் புடிச்ச ஊட்டிக்கு போலாம்னு கிளம்பினோம். குன்னூர் வழியா போறப்ப நம்ம விஷால் ஞாபகம் வந்துச்சு. சரி எட்டிப் பார்த்துட்டு போலாம்னு வந்தோம். வந்து பார்த்தா இப்படி ஒரு சீன். “
அசோக் சொல்ல நீரஜ் மற்றவர்களுக்கு கண்களால் உத்தரவிட்டான்.
அவர்கள் கத்தியை எடுக்க அசோக் சிரித்தான்.
“எங்க டாமி முன்னாடி யாராவது கத்தியை எடுத்தா டாமிக்கு ரொம்ப கோவம் வந்துரும் அப்புறம் அது என்ன பண்ணுங்கிறது எனக்கு தெரியாது. ஏதாவது விபரீதமா நடந்தா நான் பொறுப்பு கிடையாது “ அசோக் சொல்ல ஆமோதிப்பாய் டாமி குரைத்தது.
வினோத் ஆர்த்தியை விட்டுத் தள்ளி வந்தான். கத்தியை எடுத்த நான்கு பேரும் மீண்டும் தங்கள் பாக்கெட்டில் கத்தியை ஒளித்தபடி நீரஜை பரிதாபமாய் பார்த்தனர்.
“டேய் யார் நீ?” நீரஜ் அசோக்கிடம் கேட்க டேவிட் பளார் என்று நீரஜை அறைந்ததில் வாயில் உப்புக் கரித்தது.
அதை எதிர்பாராத நீரஜ் அதிர்ச்சியாகப் பார்க்க
“என்ன கண்ணா பேசிட்டு இருக்கும்போதே அடிச்சிட்டான் இவன்னு பார்க்கறியா? இவனுக்கு என் மேல பாசம் ஜாஸ்தி. யாராவது என்னை வாடா போடா சொன்னா உடனே கோவம் வந்துரும். இவன் முன்னாடி பேசறப்ப ரொம்ப மரியாதையா பேசணும். இல்லன்னா உனக்குத்தான் பிரச்னை “ அசோக் சொல்ல மற்றவர்கள் திரு திரு என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“தம்பிங்களா” அசோக் அழைத்தான்.
“அண்ணா”
“அந்த கத்தியை எடுத்துட்டு போய் பிரிட்ஜ்ல லெமன் இருக்கும் கட் பண்ணி லெமன் டீ போட்டு எல்லாருக்கும் கொடுங்க”
“சரிங்கண்ணா”
நான்கு பேரும் ஸ்டவ் பற்ற வைத்து லெமன் டீ போட்டுக் கொண்டு வர அசோக்கும் மற்றவர்களும் எடுத்துக் கொண்டனர்.
வினோத் அசோக்கிடம் தயங்கியபடி வந்தான்.
“சார்”
“ம்”
“அந்த நாய் என்னையே பார்த்துட்டிருக்கு சார் “
“நாயா? டாமி…”
“டாமி என்னையே பார்த்துட்டிருக்கு சார். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. வேற எங்கயாவது பார்க்க சொல்லுங்க சார் ப்ளீஸ் “வினா சொல்ல அசோக் டாமியை அழைத்தான்.
“டாமி”
அது குரைத்தது.
“குழந்தைக்கு பயமா இருக்கு வேற எங்கயாவது பார்க்கறியா?*
அசோக் சொல்ல டாமி கண்டுகொள்ளவில்லை. வினோத்தை தொடர்ந்து பார்க்க அசோக் சிரித்தான்.
“அது வேற ஒன்னும் இல்ல பொண்ணுங்களுக்கு யாராவது கொடுமை பண்ணா டாமிக்கு சுத்தமா பிடிக்காது. நாங்க உள்ள வரும்போது நீ ஆர்த்தி கழுத்தில் கத்தி வைத்திருந்தே . அதை டாமி பார்த்துருச்சு அதான் உன்னை பாசமாப் பார்த்திருக்கு “ அசோக் சொல்ல வினோத் பயமாய்க் கேட்டான்
“சார் இதுவா பாசம்?”
“இதுக்கு மேலயும் டாமி பாசம் காட்டும் பார்க்கறியா?”
“ஐயோ வேணா சார் இந்த பாசமே போதும்”
வினோத் சொல்ல அனைவரும் சிரித்தனர்.
அப்போது நீரஜின் மொபைல் அடித்தது.
நீரஜ் எடுத்துப் பார்க்க தேவ் என்று தெரிந்தது.
“எடுத்துப் பேசு கண்ணா நாங்க இருக்கோம்னு அவன்கிட்ட காட்டிக்காத. யார் அவன்?” அசோக் கேட்க நீரஜ் தயக்கமாய் பதில் சொன்னான்.
“என் அண்ணா”
“பேசு”
நீரஜ் எடுத்தான்.
“அண்ணா”
“நீரஜ் என்ன ஆச்சு? போன காரியம் முடிஞ்சதா?”
“அது… வந்து…”
நீரஜ் தயங்க மறுமனையில் தேவ் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்று கத்தினான்.
“என்ன ஆச்சு?”
அசோக் ஒன்றும் சொல்லாமல் நீரஜின் மொபைலை வாங்கினான்.
“உன்னோட தம்பி உயிரோட இருக்கான்னு சந்தோஷப்படு”
“யார் நீ?”
“எல்லாரும் எங்க அஞ்சு பேரையும் அசோக் & டீம் னு சொல்லுவாங்க “
“என்னப் பத்தி உனக்கு தெரியாது “
“நீ யாரு என்ன எதுவுமே எனக்குத் தெரியாது நீ சொல்றது கரெக்ட் தான் உன்னப் பத்தி எதுவுமே எனக்கு தெரியாது. ஆனால் தெரியவும் வேண்டாம். ஏன்னா இது என்னோட கதை இல்ல. விஷால் கதை. விஷாலுக்கு தெரிஞ்சா போதும் ஆனா அவனுக்கு உன்னப் பத்தி எப்ப தெரியுதோ அப்ப உன்னோட கதை முடிஞ்சிடும். ஒரே அடி போதும். டெய்லி எக்சர்சைஸ் பண்ற உடம்பு. பார்த்து ஜாக்கிரதையா இரு “ அசோக் சொல்ல தேவ் பயங்கரமாய் கத்தினான்.
“டேய்”
“எதுக்கு இப்படி கத்தற? தெலுங்கு படம் சூட்டிங் எதுவும் போயிட்டிருக்கா என்ன? “ கேட்ட அசோக் டாமி முன்பாக மொபைலை வைக்க அது உச்சஸ்தாயியில் குரைத்தது.
கார்த்தி சிரித்தான்.
“அசோக்”
“ம்”
“இனிமே அவன் வாழ்க்கையில யார்கிட்டயும் கத்திப் பேச மாட்டான்னு நினைக்கிறேன் “
“அதில்ல கார்த்தி. எல்லாரோட காது மதிப்பு அவனுக்குப் புரியும்.”
“ம்”
அசோக் நீரஜைப் பார்த்தான்.
“நீதான் இவங்களுக்குத் தலைவனா?”
“அது வந்து…”
“பரவாயில்ல சொல்லு”
“ஆமா”
“நீ ஒண்ணு பண்ணனும்”
அசோக் சொல்ல நீரஜ் அவனை திகைப்பாய் பார்த்தான்.
“என்ன பண்ணனும்?”
“பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இந்த மாதிரி நாங்க ஆறு பேரும் ஏசி சார் மனைவியை கொலை செய்ய முயற்சி பண்ணோம்னு சரண்டர் ஆகணும். “
“சார்”
“என்ன ?”
“நாங்க இனிமே இந்த பக்கம் வர மாட்டோம்”
“எனக்கு அது பத்தாது. குறைஞ்சது ரெண்டு வாரம் நீங்க எல்லோரும் ஜெயில்ல இருக்கணும். அதுக்குள்ள அவன் கேஸ் முடிச்சிடுவான். “
“வந்து…” நீரஜ் ஏதோ சொல்ல முடியல அசோக் அவனை ஏறிட்டான்.
“நீங்க என்ன பண்ணனும்னு நான் சொல்லியிருக்கேன். நான் உங்களுக்கு சாய்ஸ் கொடுக்கல. அதுக்கு உங்களுக்கு தகுதியும் இல்ல. புரியுதா?”
அசோக்கின் கோபம் அவர்களை மேற்கொண்டு ஒன்றும் பேசவிடவில்லை.
“சரிங்க சார்”
“எஸ் ஐ இங்க வருவார். உங்களை கொண்டு போறதுக்கு “ அசோக் சொல்ல அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.
கொஞ்ச நேரத்தில் எஸ் ஐ இரண்டு கான்ஸ்டபிள்களுடன் வந்தார்.
“அசோக் சார்?”
“நான்தான்”
“சார் இவங்கதான் கல்பிரிட்ஸா?”
“ஆமா”
“சார் கம்ப்ளைன்ட் கொடுக்கணும்”
எஸ் ஐ சொல்ல அசோக் திவ்யாவைப் பார்த்தான். எழுதித் தயாராக வைத்திருந்த கம்ப்ளைன்ட்டை திவ்யா ஆர்த்தியிடம் கொடுக்க அதில் கையெழுத்திட்டாள்.
அதை வாங்கிக் கொண்ட எஸ் ஐ நீரஜையும் அவனுடன் வந்தவர்களையும் அழைத்துக் கொண்டு வெளியேறினர்.
“தம்பி” நஞ்சுண்டேஸ்வரா அழைத்தார்.
“சார்” அசோக் அருகில் செல்ல அவர் அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.
“நீங்க ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும் தம்பி.” நஞ்சுண்டேஸ்வரா நெகிழ்ந்து சொல்ல ஆர்த்தி அசோக்கை நன்றியுடன் பார்த்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்”
“இட்ஸ் ஓகே. ஆனா நீங்க எப்பவுமே கவனமா இருக்கணும். விஷாலோட எதிரிங்க விஷால் மேல இருக்கிற கோபத்தை உங்க மேலயும் குடும்பத்து மேலயும் காட்டறதுக்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம். வீட்ல பாதுகாப்புக்கு தேவையான எல்லாத்தையும் வச்சிருங்க. இன்னும் சொல்லணும்னா ரிவால்வர் லைசென்ஸ் வாங்கிக்கங்க “ அசோக் சொல்ல ஆர்த்தி தலையசைத்தாள்.
“திவ்யா”
“சொல்லு அசோக்”
“நாம கிளம்பலாமா?”
“தம்பி”
“சொல்லுங்க சார் “
“உங்க ட்ரிப் முடிச்சுட்டு போறப்ப வீட்ல வந்து சாப்பிட்டுத்தான் போகணும் “
“கண்டிப்பா வர்றோம் “
அசோக்கின் மொபைல் அடிக்க எடுத்துப் பார்த்தான். விஷால்.
“சார்”
“ஒரு பிரச்னையும் இல்ல விஷால். ஆறு பேர் வந்தாங்க ஆறு பேரும் போலீஸ் கஸ்டடியில் இப்ப இருக்காங்க இன்னொரு ரெண்டு வாரமாவது உள்ளதான் இருப்பாங்க”
“ரொம்ப தேங்க்ஸ் சார்”
“எனக்கு எதுக்கு தேங்க்ஸ் கடவுளுக்கு சொல்லு. அவருக்கு தெரியும் யாரை எங்க எப்போ அனுப்பனும்னு யாரை காப்பாத்த வைக்கணும்னு “
“கண்டிப்பா சார்”
“ நாம எப்ப மீட் பண்ணலாம்?”
“நீங்க ட்ரிப் முடிச்சிட்டு வர்றப்ப உங்களுக்காக லஞ்சுக்கு நான் காத்துட்டிருப்பேன் சார் “
“தேங்க்ஸ் விஷால்”
***
தேவ் அறையில் நடந்து கொண்டே இருந்தான். உள்ளே அவன் மனம் கொதித்தது. அவன் கம்பெனிக்கு விஷால் சீல் வைத்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீரஜை போலீஸ் கைது செய்ததும் அவனால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“சந்திரசேகர்” அழைத்தான்.
“சார்”
“என்னோட லைஃப்ல நான் இப்படி யார் கிட்டயும் தோத்ததில்லை. எனக்கு கொஞ்சம் மாத்திரை கொடுங்க” தேவ் கேட்க சந்திரசேகர் அவனை பயமாய் பார்த்தார்.
“சார்….”
“எனக்கு இல்ல அந்த விஷாலுக்கு”
“சார்”
“அந்த விஷாலை இனியும் நான் விட்டு வச்சா மாநாட்டில் மாத்திரையை விநியோகிக்கிற ப்ளான் கூட நடக்காம போயிடும். “
“சார் அவசரப்படாதீங்க”
“இல்ல சந்திரசேகர் என்னால வேற எதிலும் கான்சென்ட்ரேட் பண்ண முடியல. நானா அந்த விஷாலான்னு பார்த்திடறேன்.”
தேவ சொல்ல சந்திரசேகர் அவனை பெருமூச்சுடன் பார்த்தார்.
உள்ளே சென்று ஒரு சிறிய டப்பாவில் மாத்திரைகளை போட்டுக் கொண்டு வந்தார்.
தேவ் அதை ஆர்வமாய் வாங்கிக் கொண்டான்.
“சார்”
“சொல்லுங்க சந்திரசேகர்”
“எல்லாருமே செத்துப் போயிடு வாங்கன்னு சொல்ல முடியாது சிலபேர் ரொம்ப வயலண்டா பிஹேவ் பண்ணுவாங்க ஒருவேளை அந்த விஷால் வயலண்டா பிஹேவ் பண்ணா உங்களை எப்படியாவது நீங்க காப்பாத்திக்கங்க “
சந்திரசேகர் கவலையாக சொல்ல தேவ் மாத்திரைகளையே குருரத்துடன் பார்த்தான்.
தொடரும்

Author: gavudham
Article Title: சைக்யாட்ரிஸ்ட் 9
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.