மலரினும் மெல்லியது காமம்
1
மலரினும் மெல்லியது காமம்.
படித்த புவனாவிற்கு விரக்தி கலந்த சிரிப்பு வந்தது.
இதை கணவனிடம் காட்டினால் என்ன சொல்வான்?
“வேலையற்ற பயலுங்க ஏதாவது சொல்லுவாங்க அதெல்லாம் படிச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத”
கணவன் அரவிந்த் எப்பொழுதுமே இப்படித்தான். யாரையும் மதிக்க மாட்டான் அனைவரையும் எடுத்தெறிந்து பேசுவது அவனுக்கு வழக்கமான ஒன்று.
புவனாவிற்கும் அரவிந்துக்கும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் குழந்தை இல்லை. அது ஒரு பெரிய கவலையாக மாறி அவள் மனதை அரிக்க ஆனால் அவனுக்கோ அதைப்பற்றியெல்லாம் எந்தவித கவலையும் இல்லை.
வேலைக்கு செல்வான் நன்றாக குடித்துவிட்டு வருவான் குடித்துவிட்டு வரும்போது அவனுக்கு ‘அது’ தேவைப்படுகிறது. புவனா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனுக்கு சம்மதம் சொல்ல வேண்டும். முடியாது என்று சொன்னால் காது கூசும் அளவிற்கு கெட்ட வார்த்தைகளால் திட்டுவான்.
“என்னடி வேண்டாங்கிற வேற எவன்கிட்டயாவது போயிட்டு இருக்கியா சொல்லுடி”
அரவிந்த் அடிக்கடி கேட்டு கேட்டு புவனாவிற்கு மரத்துப் போய்விட்டது. முதல்முறையாக அந்த வார்த்தைகளைக் கேட்கும் பொழுது வாழ்க்கையில் எதையோ இழந்த ஓர் உணர்வு தோன்றியது. பல நாட்களில் அந்த வார்த்தைகளை கேட்காமல் இருப்பதற்காக மட்டுமே அவனுக்கு சம்மதம் சொல்வாள். அவனுக்கு அவள் விருப்பம் எதுவும் முக்கியம் கிடையாது. அவள் மேல் ஆவேசமாக இயங்குவான். தப்பித்தவறி அவள் ஏதாவது சொல்லிவிட்டாலோ அல்லது வலியில் துடித்தாலோ அவனுக்கு ஆவேசம் இன்னும் அதிகமாகும்.
காதலுடன் காமம் என்பது பரவசமான ஒரு அனுபவம். காதலில்லாத காமத்தில் வெறி மட்டுமே இருக்கும். அந்த வெறி தணிந்து விட்டால் உடனடியாக தள்ளிப் படுத்து தூங்கத் தான் தோன்றும். காதலுடன் காமம் நிறைவு பெறும்போது இருவரும் தங்கள் அணைப்பில் தாங்களே நீண்ட நேரம் நிம்மதியாகவும் மகிழ்வாகவும் கிடப்பர்.
புவனாவின் விதி அவளுக்கு காதலுடன் காமம் அவள் வாழ்க்கையில் கிடைக்கவில்லை. அவள் மனநிலை எப்படி இருந்தாலும் சரி. அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் அவளை தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் கணவன்தான் அவளுக்குக் கிடைத்திருக்கிறான்.
வாழ்க்கை இப்படியே போய்விடுமா என்று ஆரம்பத்தில் தவிப்பாக உணர்ந்த புவனா நாளடைவில் அவளே அறியாமல் பயப்பட ஆரம்பித்தாள்.
அன்றும் இப்படித்தான். அரவிந்த் வெளியில் சென்று குடித்து விட்டு வரும் பொழுது மணி இரவு இரண்டு.
தூக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு விழித்திருந்த புவனாவின் அருகில் வந்தான் அரவிந்த். நன்றாக குடித்திருந்தான் என்பது தெரிந்தது. புவனாவிற்கு மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்ளத் தோன்றியது.
காமம் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. ஐம்புலன்களும் ஈடுபட்டால் மாத்திரமே தருபவரும் பெறுபவரும் மகிழ்வாக இருக்க முடியும்.
அருகில் வந்தவன் எதுவும் சொல்லாமல் அவளைப் படுக்க வைத்து அவள் மேல் படர முற்பட்டான். குடிகாரனுக்கு வேண்டுமென்றால் குடியின் நாற்றம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் குடிக்காத ஒருவருக்கு அருகில் ஒரு குடிகாரன் சென்றால் அது எத்தகைய சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை குடிக்காதவர்கள் மட்டுமே உணர முடியும்.
புவனா அத்தகைய சங்கடத்தை பலமுறை உணர்ந்தாள். எங்கே அவனிடம் சொன்னால் தன்னை சரி செய்து கொள்வானோ என்ற நம்பிக்கையில், என்ற எதிர்பார்ப்பில் அவனிடம் சொல்லவும் செய்தாள். ஆனால் அவன் சுத்தமாக கண்டு கொள்ளவில்லை.
“உனக்கென்னடி தெரியும்? ஆம்பளன்னா வெளில போய் வேலை செஞ்சுட்டு வரணும். அவனுக்குத் தெரியும். என்ன குடிக்கணும் எப்ப குடிக்கணும் எவ்வளவு குடிக்கணும்னு”
சொன்னபடியே அவள் ஆடைகளை கழற்ற முற்பட்டான். புவனா தடுத்தாள்.
“வேண்டாம்”
கேட்டவனை கோணல் பார்வை பார்த்தான் அரவிந்த்
“ஏன் வேண்டாம் ?” கேட்டபடி உதட்டில் முத்தமிட வந்தான். புவனாவிற்கு குமட்டியது. சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவனுக்கு கோபம் ஆனது. அந்த கோபத்தையும் அவள் உடம்பின் மீது தான் காட்டினான். அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டைக் கழற்றி தன் பல்லால் கடிக்க புவனா தன் இரு கண்களை மூடிக்கொண்டு தலையணையைப் பலம் கொண்ட மட்டும் இறுக்கிப்பிடித்து வலியை தாங்க முற்பட்டு முடியாமல் கண்களில் கண்ணீர் சிந்தினாள்.
அரவிந்த் ஒவ்வொரு முறையும் தன்மீது படரும் போது புவனாவிற்கு கடவுளிடம் கேட்பதற்கு ஒரே ஒரு கேள்விதான் இருந்தது.
‘என்னை ஏன் பெண்ணாக படைத்தாய்? நான் என்ன பாவம் செய்தேன்? என்றாவது ஒருநாள் நீயும் பூமிக்கு வர வேண்டும். அதுவும் பெண்ணாக வர வேண்டும். அப்பொழுதுதான் உனக்கு தெரியும் நாங்கள் படும் கஷ்டமெல்லாம் ‘
தன் வெறியை தணித்துக் கொண்டு அயர்ந்து தூங்குபவனை விரக்தியாய் பார்த்தாள் புவனா. உடம்பு வலித்தது.
யாராவது காமத்தை மிகச் சிறந்த அனுபவம் என்று எழுதினாலோ அல்லது மலரினும் மெல்லியது காமம் என்று எழுதினாலோ புவனாவிற்கு சிரிக்கத்தான் தோன்றியது. உண்மை என்னவென்று அறியாமல் இவர்கள் இஷ்டத்திற்கும் எழுதிவிடுகிறார்கள். அதையும் முன் அனுபவம் இல்லாதவர்கள் நம்புகின்றனர். காமம் ஒரு பரவசமான உணர்வு போல என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறனர்.
வாழ்க்கை இப்படியே போய்விடுமா? புவனாவிற்கு அடிக்கடி இந்த கேள்வி தோன்றியது. திருமணத்திற்கு முன் திருமணத்தைப் பற்றி நிறைய கற்பனை கொண்டிருந்தாள் புவனா.
தனக்கு வருபவன் தன்னை மட்டும் தான் எப்போதும் சுற்ற வேண்டும். எதற்கெடுத்தாலும் தன்னைத்தான் கேட்க வேண்டும். தான் மட்டுமே அவனுக்கு உலகமாக இருக்க வேண்டும். தன்னை அவன் எப்போதும் கொஞ்ச வேண்டும் அதுவும் என்னை நெகிழ வைத்து மகிழ்விக்க வேண்டும் என்றெல்லாம் புவனா ஆசை கொண்டிருந்தாள்.
அரவித்துடன் திருமணம் ஆனதும் அவள் கொண்டிருந்த ஆசை எல்லாம் தரைமட்டமானது. ஒரு வழியாக மனதைத் தேற்றிக்கொண்டு அவனுடன் வாழ அவள் முயற்சி செய்தாலும் அவன் குடித்துவிட்டு வருவதும் தாறுமாறாக பேசுவதும் குடிவெறியில் காமத்தைக் கையாளத் தெரியாமல் அவன் மகிழ்ச்சி மட்டுமே அவனுக்கு முக்கியம் என்பதாக நடந்து கொள்வதும் அவளுக்கு அவனை விட்டுப் போனால் போதும் என்று தோன்றியது.
ஆனால் எங்கு செல்வது?
ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமைந்தால் அவள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அதற்கு மாறாக அமைந்தால் அவள் ஒரு சிறைக்கைதி தான். கைதிகளுக்கு கூட விடுதலை என்று ஒரு நாள் உண்டு. ஆனால் அவளுக்கோ இறக்கும் வரை விடுதலை என்பது இல்லை. மோசமாக நடந்து கொள்ளும் கணவனை விட்டு எங்காவது செல்லலாம் என்றால் எங்கும் யாரும் அவளை வரவேற்க மாட்டார்கள்.
“புருஷன்னா அப்படித்தான் இருப்பான் நீ தான் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கணும்” அம்மா முதல் அனைத்து உறவினர்களும் இதைத்தான் சொல்வார்கள்.
“வா நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று யாரும் சொல்ல மாட்டார்கள் அப்படி யாராவது சொன்னால் அதிலும் ஏதாவது நிச்சயம் உள்நோக்கம் இருக்கும். அப்படி சொல்பவனுக்கு ரகசியமாய் தேவை இருக்கலாம். இருக்கும் .அந்த தேவையை நோக்கி அவன் நகர்வான். அப்பொழுது அந்த பெண் வேறு வழியில்லாமல் அவனுக்கு உடன்பட வேண்டும் எதிர்ப்பு தெரிவித்தால் அவன் உண்மை முகத்தைக் காட்டுவான்.
புவனா தன் விதியை நொந்து கொண்டு ஒவ்வொரு நாளையும் ஒரு யுகமாய் கழித்தாள்.
“புவனா”
யாரோ வாசலில் இருந்து அழைக்க வெளியில் வந்து பார்த்தாள். பக்கத்து வீட்டு கோகிலா நின்றிருந்தாள்.
“வாங்கக்கா”
“மாரியம்மன் கோவிலுக்கு பொங்கல் வைக்கப்போறேன் நீயும் வறியா ?”
போய் வரலாம் என்று அவளுக்கு தோன்றியது. ஒரு மாறுதலாக இருக்குமே என்று எண்ணினாள்.
“சரிக்கா . எப்ப பொங்கல் வைக்கப் போறீங்க?”
“வர்றபுதன்கிழமைதான்”
“சரிக்கா நானும் வர்றேன்”
அன்று மாலையில் வீட்டிற்கு வந்த அரவிந்திடம் கேட்டாள்.
“கோகிலாக்கா வந்திருந்தாங்க”
“என்ன விஷயம்?”
“வர்ற புதன்கிழமை மாரியம்மன் கோவிலுக்குப் பொங்கல் வைக்கப் போறாங்க. என்னையும் கூப்பிட்டாங்க”
“இப்ப நீ கோவிலில் போய் பொங்கல் வைக்கிறதனால யாருக்கு என்ன நல்லது நடந்திடும் ?”
அரவிந்த் குரலில் தெரிந்த கேலி அவளை வருத்தப்பட வைத்தது.
‘கடவுளையே ஒரு மாதிரி பேச ஆரம்பித்து விட்டான்.’
ஒன்றும் சொல்லாமல் அவனை பரிதாபமாய் பார்த்தாள்.
“என்னடி அப்படி பார்க்கிறே?”
“ஒண்ணும் இல்லைங்க” சொன்னபடி நகர முயன்றவளை நகர விடாமல் தன் கையை குறுக்காய் மறித்தான்.
“என்னங்க?”
“என்ன என்னங்க? வாடி சும்மா புரியாத மாதிரி நடிச்சுக்கிட்டு” சொன்னபடி அவளை கட்டிலில் தள்ள முயற்சித்தான். புவனா அவனையே பார்த்தாள்.
“என்னடி அப்படி பார்க்கிறே?”
“நான் ஒண்ணுகேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?”
“சொல்லுடி”
“உங்களுக்கு அதுக்கு மட்டும் தான் நான் வேணுமா?”
புவனா அவன் முகத்தைப் பார்த்து பரிதாபமாய் கேட்க அவன் வீடு அதிரும்படி சிரித்தான்.
“வேற எதுக்குடி நீ? அதுக்குத் தான்” சொன்னவன் அவள்மேல் படர அவளுக்கு அவனை விலக்கத் தோன்றவில்லை. அதற்குக் காரணம் சீக்கிரமாக முடித்துவிட்டு ஒழிந்து போனால் சரி என்ற மனநிலைக்கு அவள் தள்ளப்பட்டது தான்.
அரவிந்த் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் ஒரு மிருகம் மாதிரி அவள் மீது இயங்கிவிட்டு தன் தேவை முடிந்ததும் சட்டென்று அவளிடம் இருந்து விலகிப்படுத்தான்.
புவனாவிற்கு அன்று காலையில் படித்த ஒரு கதையில் நாயகன் நாயகியை கொஞ்சியது நினைவிற்கு வந்தது. அரவிந்தைப் பார்த்தாள்.
‘எப்பவும் தானே என்னை எடுத்துக்கற? என்னையும் கொஞ்சம் ரசி. என்னை ஏதாவது சொல்லி என்னை மலர வை. என்னையும் கொஞ்சம் ரசிக்க வை. ‘
ஒரு மனம் சொல்ல மறு மனம் அவளை கேலியாய் பார்த்தது.
“யார் இவனா ? எப்பொழுது ஒரு ஆண் காதலுடன் காமத்தைக் கையாள முடியும்? அவனுக்கு அவள் மீது மதிப்பு வரவேண்டும். ஒரு பெண்ணை மதிக்காத ஆணால் அவளை காதலிக்க முடியாது. காதல் இல்லாத ஆணுக்கு வெறும் காமம் மட்டும் தான் இருக்கும்.
தனக்குள் எதையோ யோசித்த புவனாவிற்கு தூக்கம் வரவில்லை. தன் மொபைலை எடுத்தவள் இன்ஸ்ட்டாவை நோண்டினாள்.
‘ஹலோ கொஞ்சம் பேசுங்க’
‘ஏங்க பேச மாட்டேங்கிறீங்க?’
‘குட் மார்னிங்,’
பல குறுஞ்செய்திகளைப் பார்த்தவள் எதற்கும் பதில் அனுப்பாது மொபைலை அணைத்து வைத்தாள்.
அரவிந்த் நன்றாக தூங்கிக் கொண்டிருக்க பால்கனியில் வந்து நின்று வானத்தைப் பார்த்தாள்.
நிலா மேகக்கூட்டத்தில் ஒளிவதும் பின் தவழ்வதும் வெளியில் வருவதுமாக இருக்க தன்னையும் மறந்து ரசித்தாள்.
மறுநாள் புதன்கிழமை.
கோகிலா வருவதற்கு முன் குளித்துத் தயாராக இருந்தாள். அவள் வந்ததும் இருவரும் கோவிலுக்குக் கிளம்பினர்.
பொங்கல் வைப்பதற்கு ஓர் இடத்தில் தேவையான சாமான்களை வைத்துவிட்டு அடுப்பைப் பற்ற வைக்க சுள்ளி எங்காவது இருக்கிறதா என்று புவனா பார்க்க
“இந்தாங்க என்கிட்ட இருக்கு” தன் கையில் சுள்ளியை வைத்திருந்த அந்த இளைஞன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
தொடரும்
கவுதம் கருணாநிதியின் நெஞ்சை
அள்ளும் காதல் கதை ' இதழ்த்தடம்' GK Tamil Novels You Tube Channel ல் கேட்டு மகிழுங்கள்.

Last edited:
Author: gavudham
Article Title: மலரினும் மெல்லியது காமம் 1
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.