ரத்தக்காட்டேரி 2

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
101
1
18
2
செல்வி தன் முன் நின்ற உருவத்தை பயமாய் பார்த்தாள்.
அதன் உடலெங்கும் முடி வியாபித்திருந்தது. கண்கள் இரண்டும் இருட்டிலும் ஒளிர்ந்தன. சற்றே குனிந்த ஆதி மனிதன் போன்ற உடம்பு. இரு.கைகளிலும் கூர்மையான. நகங்கள் வளைந்திருந்தன. வாயை அகலமாய் திறந்து கத்தியது. அது இதுவரை கேள்விப்படாத சத்தமாய் காட்டை அதிர வைக்க பறவைகள் பயந்து ஒலியெழுப்பிப் பறந்தன.
செல்வி நடுங்கினாள். அலைபேசியின் டார்ச்சை அணைத்தாள். இருட்டைப் பயன்படுத்தி எங்கேயாவது போய் தப்பிக்க முடியுமா? யோசித்து முடித்திருக்க மாட்டாள்.
அவள் கால்களை அது பிடித்து இழுத்தது.
கூர்மையான நகங்கள் செல்வியின் காலைக் கிழிக்க செல்வி.அலறினாள்.
"அம்மா..காப்பாத்து.." அவளின் அலறல்.சத்தம் காட்டில் நான்கு திசைகளிலும். எதிரொலிக்க அது தன் கூரிய கோரப் பற்களை செல்வியின். முகத்தின் அருகில் கொண்டு சென்றது.
"வேண்டாம்.." செல்வி அலறினாள்.
அது செல்வியின் தலையை சாய்த்துப் பிடித்தது. செல்வியின் கழுத்தில் தன் கோரப் பல்லால் கடிக்க ரத்தம் பீறிட்டது. செல்வி துடித்தாள். தன் வாயால்.அவள் கழுத்தில் இருந்து வெளிவந்த ரத்தத்தை உறிஞ்சியது. செல்வி விடுபட போராடினாள். திமிறினாள். முடியவில்லை. அதன் பிடி மிக உறுதியாக இருக்க அவளால் அசையக்கூட முடியவில்லை. உடம்பு மட்டும்.துடித்தது. மூன்று முறை துடித்த செல்வியின் உடம்பு அடங்கத் தொடங்கியது. அப்போதும் அதன் வாய் செல்வியின் கழுத்தில் இருந்து மாறவில்லை.
மொத்த ரத்தத்தையும் குடித்து முடித்த அது அவளை விட்டது. செல்வியின் உடல் .வேரற்ற மரம் போல் சரிந்து விழுந்தது.
***
காலை.
செல்வியின் உடலைச் சுற்றி கோடு வரையப்பட்டிருந்தது. செல்வி ஆம்புலன்ஸில்.ஏற்றப்பட்டாள். அவள் அம்மா பார்வதி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதாள்.
'ஒத்த பொட்டப் புள்ளைய வெச்சிருந்தேன். இப்படி.காவு கொடுத்துட்டேனே' கதறி அழுதாள்.
நாட்டாமை கண்ணப்பன் அருகில்.வந்து.தேற்றினார்.
"எத்தனை முறை.சொன்னோம்? கேக்கலையே.. பொழுது சாயறதுக்குள்ள வீட்டில்.இருக்கணும்னு.." கண்கள் கலங்க சொன்னார்.
சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா. செல்வியின். உடம்பைப் பார்த்தார். கழுத்தில். பல் பதிந்த தடம். இருந்தது . வேறு.காயங்கள் ஒன்றுமில்லை. ரத்தம் இல்லாமல் வெளிறிப் போய் கிடந்த செல்வியைப் பார்க்க அவருக்கும் மெல்லிய பயம் உள்ளே ஓடியது. ஆனால் காட்டிக்கொள்ளாமல் மற்ற சம்பிரதாயங்களில் ஈடுபட்டார்.
ஆம்புலன்ஸ் கிளம்பியது. போட்டோகிராபர் பாரன்சிக் ஆட்கள் எல்லோரும் கிளம்பினர்.
கிருஷ்ணா மெதுவாய் நடந்து தடயம் எதுவும் இருக்கிறதா என்று பார்த்தார். ஒன்றும் இல்லை.
'சந்திரன் செத்ததற்குப் பிறகு இது இரண்டாவது சாவு. அதே போல் தான் மரணம். அந்த ரத்தக்காட்டேரி உண்மைதான். சின்ன வயதில் கதையாய் கேட்டது இப்ப இந்த கிராமத்தை முடக்கிப் போட்டிருக்கு'
தனக்குள் யோசித்தபடி நடந்த கிருஷ்ணாவின் கால்களில் ஏதோ இடறியது.
என்னவென்று பார்த்தார்.
அது
செல்வியின் அலைபேசி.
***
"என்னங்க நீங்க? " சலித்துக்கொண்டாள் கீர்த்தி. அருகில் அவள் கணவன் கணேஷ்.
காரை ஓட்டிக்கொண்டிருந்த கணேஷ் புன்னகைத்தான்.
"இன்னும் அரை மணி நேரம் தான். காட்டேஜ் வந்திடும்.."
"எல்லோரும் கல்யாணம் பண்ண புதுசில் ஊட்டி கொடைக்கானல் னு காட்டேஜ் புக்.பண்ணுவாங்க. நீங்க கிராமத்தில் புக் பண்ணிருக்கிறீங்க..?"
"கீர்த்தி.. அது எங்க ஊர் மா.. இப்போ நாங்க யாரும் அங்கே இல்லை. இருந்தாலும் அப்பாக்கு ரொம்ப பிடிக்கும் எங்க ஊர். அதான் நம்ம மணவாழ்க்கைய அங்கேயே தொடங்கலாம்னு.."
"என்ன சென்டிமென்டோ ..போங்க.. எனக்குப் பசிக்குது.."
"முருகன் கிட்டே சொல்லிட்டேன். இந்நேரம் எல்லாம் சமைச்சு வெச்சிருப்பான். போய் ஒரு வெட்டு வெட்டுவோம்"
கணேஷ் சொன்ன அதே நொடியில் அந்தப் பிராந்தியம் மொத்தமும் இருட்டானது.
""கணேஷ்" கீர்த்தியின் குரலில் பயம் தெரிந்தது.
"கரண்ட் போயிடுச்சு கீர்த்தி" சொன்னவன் ஹெட் லைட் வெளிச்சத்தில் கவனம் சிதறாமல் ஓட்டினான்.
"என்னங்க.." கீர்த்தியின் குரலில்.நடுக்கம்.
எதற்குப் பயப்படுகிறாள்? குழப்பமாய் கீர்த்தியைப் பார்க்க கீர்த்தியின் பார்வை சாலையில் இருக்க கணேஷ் சாலையைப் பார்த்தான்.
ஏதோ ஓர் உருவம் சாலையின் நடுவில்.இருக்க மனிதனா? கணேஷ் யோசித்தான். மனிதனாக இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு மிருகம். பிரேக்கை பலம் கொண்ட மட்டும் மிதிக்க கார் குலுங்கியது. அந்த உருவத்தின் அருகில் போய் நின்றது.
அந்த உருவம் பானெட்டை ஓங்கி அறைந்தது.
"கணேஷ் ஆபத்து..காரை எடுங்க" கீர்த்தி.அலற கணேஷ் சுதாரித்தான். காரை வேகமாய் கிளப்பினான். பின்னால் படுபயங்கரமாய் சத்தம் போட்டபடி அந்த உருவம் துரத்திவந்தது.
கொஞ்ச தூரம் சென்றபின் கணேஷ் திரும்பிப் பார்த்தான். சாலையில் யாருமில்லை. நிம்மதிப்.பெருமூச்சு. விட்டவனை பயத்துடன் பார்த்தாள் கீர்த்தி.
"கணேஷ்"
"சொல்லும்மா"
"ஒண்ணு சொல்லட்டா?"
"ம்ம்"
"நாம திரும்பிப்.போய்டலாமா? எனக்கு பயமாயிருக்கு"
"என்ன பயம்?"
"ஏதோ கெட்டது நடக்கப் போகுதுன்னு"
"புல்ஷிட்" கணேஷ் கோபமானான்.
"உங்களுக்கு பயமா இல்லையா?"
"எதுக்கு பயம்?"
"தெரியல கணேஷ்.."
"கீர்த்தி..உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயி ரெண்டு வாரம் தான் முடிஞ்சிருக்கு. எங்கப்பாவோட ஊர் எனக்கு எப்பவுமே சென்டிமென்ட். காட்டேஜ் ல ரெண்டு வாரம் தங்கறோம். நாங்க இருந்த வீடு கும்பிட்ட கோவில் எங்க ஊர் மக்கள் எல்லாமே உனக்கு காட்டணும்னு ஆசையா இருக்கேன். அதையும் இதையும் பேசி என்னை கோபப்படுத்தாதே கீர்த்தி"
சொன்னவனைப் பார்த்த கீர்த்தி
"அதுக்கு சொல்லல கணேஷ்.." ஏதோ சொல்ல முயன்ற கீர்த்தியை கணேஷ் தடுத்தான்.
"நீ எதுக்கும் சொல்ல வேண்டாம்" கணேஷ் சொல்ல கீர்த்தி அமைதியானாள். இருந்தாலும் அவள் மனதில் ஏதோ ஓர் இனம்புரியாத பதட்டம் ஓடிக்கொண்டே இருந்தது.
கார் மண் சாலையில் திரும்பியது. ஐந்து நிமிடங்களில் அந்த காட்டேஜ் வந்தது.
ஹாரன் அடித்தான்.
முருகன் ஓடிவந்தான். கேட்டைத் திறந்து விட்டான். புன்னகைத்தான்.
காரை பார்க் செய்த கணேஷ் இறங்கினான். கீர்த்தி சுற்றுமுற்றும். பார்த்தாள். ரம்மியமான இடம்.
"சாப்பாடு ரெடியா முருகா?"
கணேஷ் கேட்டான்.
"ரெடி சார்..இங்க வந்து சாப்பிடறீங்களா? இல்ல ரூமுக்கு கொண்டு வரணுமா?"
"என்ன பண்ணலாம் கீர்த்தி?"
"வந்தே சாப்பிடலாங்க"
இருவரும் அறைக்குள் சென்றனர்.
கதவை சாத்திய கணேஷ் கீர்த்தியை பிடித்து அணைத்துக் கொண்டான்.
"என்னங்க..இது? விடுங்க.." என்று.சொன்னாலும்.கீர்த்தி அவனை ரசிக்கவே செய்தாள்.
"ஒரு கிஸ் வேணும்.." உதட்டருகில் வந்தான்.
"அப்புறமா?" சொன்ன கீர்த்தியை கண்டு கொள்ளாத கணேஷ்
"அப்புறமா மெயின் பிக்சர்.. இப்போ ட்ரெயிலர்.." சொல்லியபடி அவள் இதழ்களைக் கவ்வினான்.
கொஞ்சநேரம் கண்கள் மூடிய இருவரும் ஒருவரையொருவர் விடுவித்தனர்.
சாப்பிட க் கிளம்பினர்.
முருகன் பரிமாறினான்.
சப்பாத்தி சிக்கன் கறி எக் மசாலா செய்திருந்தான். குளிருக்கு இதமாய் இருக்க திருப்தியாய் சாப்பிட்டு. எழுந்தனர்.
"சார்.." முருகன் கூப்பிட்டான்.
"சொல்லு முருகா.."
"வீட்டுக்குப் போயிட்டு காலையில் வரட்டுங்களா?"
"உன் வீடு எங்கிருக்கு?"
"இங்க தானுங்க.. ரெண்டு கிலோமீட்டர் ல இருக்கு. எதுனா வேணும்னா கூப்பிடுங்க..ஓடி வந்துடறேன்."
"சரி முருகா..கிளம்பு.."
முருகன் கிளம்பிப் போய் விட கணேஷ் கீர்த்தி இருவரும் அறைக்குச் சென்றனர்.
கணேஷ் பாத்ரூமிற்குள் சென்று முகம் கழுவ கீர்த்தி பொருட்களை எடுத்து வைத்தாள்.
அப்போது வெளியில் ஏதோ சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒன்றுமில்லை.
'எனக்குத்தான் அப்படி தோணுது' தன் தலையை நோகாமல் அடித்தபடி புன்னகைத்தாள்.
"கீர்த்தி.." கணேஷ் அழைத்த தொனியில் அவன் எதற்கு அழைக்கிறான் என்று புரிந்து கொண்ட கீர்த்தி புன்னகைத்தாள். கணேஷ் நெருங்கினான். விளக்கை அணைத்தான்.
அப்போது ஜன்னல் கண்ணாடியில்.ஒரு கை பதிந்தது. கையில் புசுபுசுவென்று முடி.
 

Author: gavudham
Article Title: ரத்தக்காட்டேரி 2
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.