Home Featuredபகவான் 2

பகவான் 2

by GK Tamil Novels
20 views

ஏகாம்பரம் நடுங்கினார்.

“நான் எவ்வளவு பணம் வேணும்னாலும் உங்களுக்கு என்ன விட்டுருங்க ப்ளீஸ்”

வேலா அவரை கண்டுகொள்ளவில்லை. அருகில் இருந்த இரும்புத்தடியை எடுத்தான்.

“வே…ண்டா… ம்” அலறிய ஏகாம்பரம் ஓட முற்பட வேலா அந்த தடியை அவர் தலையை குறிபார்த்து வீசினான். அது அவனுக்கு விசுவாசமாக அவர் பின் தலையைத் தாக்கியது. ஏகாம்பரம் கீழ விழ இரண்டு பேர் அவர் அருகில் சென்றனர்.

வேலா அவர்களுக்கு கண் காட்ட ஒருவன் ஏகாம்பரத்தை தரதரவென்று இழுத்துப் போய் ஆம்னியில் ஏற்றினான்.

“சொன்னது ஞாபகம் இருக்கா?” வேலா கேட்க அவன் தலையசைத்தான்.

“டிராக்ல போட்டு ரயில அடிச்ச மாதிரி இருக்கணும். கரெக்டா ?”

“ம்”

***

ராஜ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை.

பல ஏக்கரில் மிக பிரம்மாண்டமாக மருத்துவமனை வளாகம் இருந்தது.

முதல்வர் தேஷ் பாண்டே தன் முன் நின்றிருந்த தர்மாவைப் பயத்துடன் பார்த்தார்.

“என்ன சொல்றே?”

“எங்களுக்கு அவ வேணும்”

“என்ன இவ்வளவு அசால்ட்டா சொல்ற? இது எவ்வளவு பிரச்னையாகும் தெரியுமா?”

“என்னை என்ன பண்ண சொல்றீங்க? “
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு தர்மா” சொன்ன முதல்வரை கோணலாய் பார்த்து புன்னகைத்த தர்மா

“நானும் என்னோட ஆளுங்களும் நைட் இங்க வருவோம்.. நீங்க ஏதாவது பண்ணி அவள இங்க இருக்க வைங்க”

“அது என்னோட கையில இல்ல. “

“அவளுக்கு நைட் டூட்டி போடுங்க “

“ அது வந்து…”

“போடறீங்க.”

தர்மா கிளம்பி விட தேஷ் பாண்டே தன் வியர்வையைத் துடைத்தார்.

டீனிற்கு அழைத்தார்.

“ஆரோக்கியராஜ் ?”

“சார்”

“இன்னிக்கி பாலியேட்டிவ் கேர் நைட் டூட்டி எந்த டாக்டருக்குப் போட்டிருக்கீங்க?”

“டாக்டர் சந்தோஷ் டாக்டர் ரமணன்”

“அவங்க ரெண்டு பேரும் வேண்டாம்”

“சார்”

“டாக்டர் நீதுக்கு கொடுத்துடுங்க”

“இன்னொருத்தர் சார்?”

“இல்ல இன்னிக்கு ஒருத்தருக்கு மட்டும் போதும் “

“ஓகே சார்”

டாக்டர் நீது நோயாளிகளைப் பார்த்துவிட்டு வந்து தன் இருக்கையில் அமர்கையில் மணி இரவு பத்து.

அவள் அலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தவள் முகம் மலர்ந்தது.

சந்தோஷ்.

“நீது”

“ம்”

“இன்னைக்கு என்னன்னு தெரியல ஃபர்ஸ்ட் எனக்கு டூட்டி போட்டிருந்தாங்க அதை கேன்சல் பண்ணிட்டு உனக்கு போட்டுட்டாங்க”

“இட்ஸ் ஓகே சந்தோஷ் நோ ப்ராப்ளம்”

“அன்னிக்கு நீ டீன் கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணியே”

“ம் ஆமா”

“அதிலிருந்து எனக்கு மனசே சரியில்லை அப்பப்ப திக் திக்குன்னு இருக்கு”

“உனக்கு ரொம்ப பயம்”

“உண்மைதான்”

“ஏன்?”

“நமக்கு யார் மேலயாவது அக்கறை ஜாஸ்தியா இருந்துச்சுன்னா பயம் ஆட்டோமேட்டிக்கா வரும்”

“இப்பயே இப்படி இருக்கே. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உன்கிட்ட மாட்டிகிட்டு நான் என்னாகப் போறேனோ ?” நீது சிரித்தபடி கேட்க சந்தோஷ் கவலையாய் சொன்னான்.

“பத்திரமா இரு”

“ம்*

பேசிவிட்டு மொபைலை டேபிளில் வைத்தவள் காதுகளில் கேட்டது காரிடாரில் யாரோ நடந்து வரும் ஓசை.

டாக்டர் மைக்கேல் டீ போட்டுக் கொண்டு தன் சேரில் அமரும்போது அவர் மொபைல் அடித்தது.

“ஹலோ”

மறுபடியும் கேட்ட குரல் அவர் முகத்தை மலரச் செய்தது.

“டார்கெட் கண்டிப்பா மிஸ் ஆகக்கூடாது”

“யெஸ் சார்”

“எத்தனை பேர் இருக்கீங்க?”

“ஆறு பேர்”

“ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல கான்ஃபரன்ஸ் ரூம் இருக்கு. ஏசிய ஓட விட்டுடு. அங்க அக்கஸ்ட்டிக் டிசைன் படி உள்ள என்ன சத்தம் போட்டாலும் வெளியே கேட்காது”

“புரியுது சார்”

“காரியத்தை கரெக்டா முடிச்சிடு. எனக்கு போன் பண்ணாத. பிரின்ஸ்பால் எனக்கு இன்பார்ம் பண்ணுவார்.”

“யெஸ் சார்”

“அப்புறம்…”

“சொல்லுங்க சார்”

“அவ அவ்வளவு ஈஸியா சாகக்கூடாது”

“புரியுது சார்”

பேசி முடித்த டாக்டர் மைக்கேல் டீயை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தார்

யார் என்று பார்ப்பதற்கு டாக்டர் நீது எழ கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு ஆறு பேரும் நுழைந்தனர். தர்மா முன்னால் வந்தான்.

அவன் கையில் மிகக் கூர்மையாய் கத்தி.

நீது திடுக்கிட்டுப் போய்ப் பார்க்க அவன் அருகில் வந்தான்.

“யார் நீங்கல்லாம்?”

கேட்டவளை கண்டுகொள்ளாதவன் அருகில் வந்தான். அவள் வாயில் பிளாஸ்திரியை ஒட்டினான். நீது திமிற அவள் கைகளைப் பற்றி தரதரவென்று இழுத்தான்.

“வரதா”

“சொல்லு தர்மா”

“காரிடார்ல போய் பாரு”

“ம்”

அவன் போய் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று சிக்னல் தர தர்மா நீதுவை இழுத்துக் கொண்டு கான்ஃபரன்ஸ் ரூம் அருகில் சென்றான். கதவை தள்ள கதவு திறந்தது.

ஒருவர் பின் ஒருவர் வரிசையாக உள்ளே நுழைந்தனர்.

நீது அனைவரையும் பயமாய் பார்த்தாள்.

“என்ன டாக்டர் அப்படி பார்க்கிறே? இன்னிக்கு உனக்கு நாங்க சாந்தி முகூர்த்தம் பண்ணப் போறோம்.” தர்மா சொல்ல நீது ஏதோ சொல்ல முயன்றாள். முடியவில்லை.

தர்மா சிரித்துக் கொண்டே அவள் வாயிலிருந்து பிளாஸ்திரியை அகற்றினான்.

“ப்ளீஸ் என்னை விட்ருங்க நான் பாவம்”

“இல்லையே நீ ஹாஸ்பிடல்ல நிறைய டிடெக்டிவ் வேலையெல்லாம் பண்ணியிருக்கியே”

தர்மா கேட்க அவள் முகம் வெளிறியது.

“நீ …”

“சரி நாங்க வந்த வேலைய ஆரம்பிக்கிறோம். உன்கிட்ட பேசி நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்” சொன்ன தர்மா அவள் அருகில் வர அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள்.

இங்கே கத்தினால் யாருக்கும் கேட்காது. எப்படியாவது கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினால் உதவி கிடைக்கும்.

யோசித்தவள் அருகில் வந்த தர்மா அவள் முகத்தை நிமிர்த்தினான்.

“என்ன எப்படி தப்பிக்கலாம்னு யோசிக்கிறியா? இன்னைக்கு உன்னோட கதை முடியப்போகுது. உன்னை காப்பாத்த கடவுள் கூட வர மாட்டார்.” தர்மா சொல்ல சட்டென்று அங்கே கரண்ட் போனது. அதை எதிர்பாராத தர்மா திகைத்தான். அப்போது கதவை யாரோ திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அவனுடன் வந்த மற்றொருவன் விசில் அடிக்க கரண்ட் வந்தது.

தர்மாவும் அவனுடன் வந்தவர்களும் இருவரையும் கோபமாய் பார்த்தனர்.

“யார்றா நீங்க?” ஒருவன் கேட்க கூட வந்தவன் பளார் என்று அவனை அடித்தான். கேட்டவன் பொறி கலங்கிப் போய் கீழே விழுந்தான்.

“குட் ஷாட் குணா” சொன்னபடி உயரமாய் இருந்தவன் தர்மாவின் அருகில் வந்தான்.

“யார் நீ?” தர்மா அவனிடம் கேட்க குணா புன்னகையுடன் சொன்னான்.

“நாங்க வரும்போது என்னமோ சொன்னியே. டாக்டரக் காப்பாத்த கடவுள் கூட வர மாட்டார்னு கடவுள் வேணா வராமப் போலாம். ஆனா இவன் வருவான். யாருன்னு பார்க்கறியா? பகவான் டா”

குணா சொல்ல தர்மா பயமாய் பார்த்தான்.

பகவான் எழுந்தான்.

“ஒரு லேடி டாக்டரைக் கொலை பண்ண ஆறு பேர்.” சிரித்தான்.

“உன் பேர் என்னம்மா?”

“நீது அண்ணா”

“நீ கிளம்பு வீட்டுக்குப் போ” பகவான் சொல்ல அவள் அவனை கும்பிட்டாள். கிளம்பினாள்.

“குணா”

“ம்”

“இவங்களை என்ன பண்ணலாம்?”

“கத்தியா பிஸ்டலா ?”

“பிஸ்டல்”

பகவான் சொல்ல தர்மாவும் உடன் வந்தவர்களும் அலறினார்கள்.

“வேண்டாம் நாங்க போயிடறோம்”

ஒருவன் கதவை நோக்கி ஓட குணாவின் பிஸ்டலில் இருந்து வெளிப்பட்ட தோட்டா அவன் தலையில் பாய்ந்து அலறியடி விழுந்தான்.

“சத்தம் வெளியில கேட்குமா குணா ?”

“இது கான்ஃபரன்ஸ் ஹால் கேக்காது”
குணா சொன்ன பகவான் மற்றவர்களைப் பார்த்து புன்னகைத்தான்.

“உங்களோட கடைசி ஆசை என்னன்னு கேட்க முடியல அதுக்கு நேரம் இல்ல. “

“எங்களுக்கு கொன்னுடாதீங்க சார் ப்ளீஸ் “ தர்மா கெஞ்ச பகவான் சிரித்தான்.

“மத்தவங்களுக்கு இரக்கம் காட்டாத யாருக்குமே நான் இரக்கம் காட்டறதில்லை “ சொன்னவன் குணாவிடம் திரும்பி “முடிச்சுடு” என்றான்.

அடுத்த பத்து நிமிடங்களில் ஐவரும் சடலங்களாய் கிடந்தனர்.

குணா பகவான் இருவரும் வெளியில் வந்தனர்.

காரிடாரில் நடந்து கீழே இறங்கி எதிரில் வந்த ஒரு செக்யூரிட்டியிடம் கேட்டனர்.

“பிரின்ஸ்பால் ரூம் எங்க இருக்கு?”

பிரின்ஸ்பால் தேஷ் பாண்டே பகவான் குணா இருவரையும் அதிர்ச்சியாய் பார்த்தார்.

“ என்ன சொல்றீங்க?”

“கேன்சர் பிளாக் கான்ஃபரன்ஸ் ரூம்ல ஒரு ஆறு பேர் செத்துக்கிடக்கறாங்க “

“ மை காட் எப்படி?”

அவர் கேட்க பகவான் அவரை நேர் பார்வை பார்த்தபடி சொன்னான்.

“நான் தான் கொன்னேன் “

“ யார் நீ?”

“பீப்பிள் வெல்ஃபேர் கேள்விப்பட்டிருக்கியா?” பகவான் கேட்க பிரின்சிபால் முகம் மாறியது. பதட்டமாய் கேட்டார்.

“நீங்க?”

“பகவான்”

“மன்னிச்சுக்கங்க “ சொன்னபடி எழுந்தார்.

“உட்காரு. அந்த ஆறு பேரும் ஒரு லேடி டாக்டரை கொலை பண்ண வந்திருக்காங்க.”

“என்ன சொல்றீங்க?”

“நடிக்காத உனக்கு எல்லாமே தெரியும். உனக்கு தெரியும்கிறது எனக்குத் தெரியும் “ பகவான் சொல்ல பிரின்ஸ்பால் தலை குனிந்தார்.

“நீ ஒண்ணு பண்ணனும்”

“என்ன பண்ணனும்?”

“டாக்டர் உன்கிட்ட என்ன கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க?”

“அது வந்து…”

“ ரெண்டாவது முறையா நான் எந்த கேள்வியும் யார்கிட்டயும் கேட்க மாட்டேன் “

“ஸ்டுடன்ட்ஸ்க்கு ட்ரக்ஸ் சப்ளை பண்ணதுல இங்கே இருக்கிற ஒரு டாக்டர்ஸ் க்ரூப்புக்கு சம்பந்தம் இருக்குன்னு “

“அது மேல நீ என்ன நடவடிக்கை எடுத்தே?”

“வந்து…”

“அந்த டாக்டரை கொலை பண்றதுக்கு ஏற்பாடு பண்ணவங்களுக்குத் துணை போயிருக்கே. கரெக்டா ?”

“வந்து…”

“ஆமாவா இல்லையா?”

“ம்”

“நாளைக்கு காலைல போலீஸ் வரும். அந்த ஆறு பேரையும் சுட்டுக்கொன்னது நீதான்னு போலீஸ் கிட்ட சொல்லணும் “

“நானா?”

“ஆமா. ரவுண்ட்ஸ் போனேன் அப்ப அந்த ஆறு பேரும் டாக்டரைக் கொலை பண்றதுக்கு ட்ரை பண்ணாங்க. அதனால ஆறு பேரையும் சுட்டுக்கொன்னுட்டேன்னு சொல்லணும். குணா அந்த பிஸ்டல் சார்கிட்ட கொடு “ பகவான் சொல்ல குணா தன் கர்ச்சீப்பால் பிஸ்டலை நன்றாகத் துடைத்தான். தேஷ் பாண்டேவிடம் கொடுக்க அதை தயக்கமாய் வாங்கிக் கொண்டார்.

“ஓகே பிரின்ஸ்பால் சார் அப்ப நாங்க கிளம்பறோம் நான் சொன்னதுல இருந்து நீங்க ஏதாவது மாத்தி பண்ணீங்கன்னா நான் திரும்ப இந்த காலேஜுக்கு வர வேண்டியது இருக்கும். அப்போ உங்களுக்காக தான் வருவேன். “

“இல்ல நீங்க சொல்றத நான் அப்படியே பண்றேன். திரும்ப வர வேண்டாம்”

அவர் பயத்துடன் சொன்ன பகவான் சிரித்தான்.

“வேண்டாமா? சரி. அப்புறம் இன்னொரு விஷயம்..”

“சொல்லுங்க”

“இது சிட்டில லீடிங் காலேஜ் டொனேஷன் நிறைய வாங்கறீங்க போல “

“வந்து…”

“ஆமாவா இல்லையா”

“ஆமா”

“எங்க இயக்கத்துக்கு உங்க காலேஜ் டொனேஷன் பண்ணனுமே”

“பண்ணிடறேன் “

“வெரிகுட்”

“தேங்க்ஸ்”

“ஓகே நாங்க கிளம்பறோம் இன்னொரு முக்கியமான விஷயம்”

“சொல்லுங்க”

“என்னைப் பார்த்ததா யார்கிட்டயும் எப்பவும் சொல்லக்கூடாது புரியுதா ?” பகவான் கேட்க பிரின்சிபால் பயமாய் தலையசைத்தார்.

“ ம்”

You may also like

Leave a Comment

error: Content is protected !!