கவுதம் கருணாநிதி எழுத்தில் இறுதி வரை பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத ஒரு கிரைம் கதை "டேனியல்"சந்தர்ப்ப சூழ்நிலையால் டேனியல் ஒருவனை கொன்று விடுகிறான். அந்த கொலை வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர். டேனியலின் சகோதரியை அவருக்குப் பிடித்துப் போக அவருக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது . கொலைகாரனை பிடித்த உடன் கல்யாணம் என்றிருக்கிறார் இன்ஸ்பெக்டர். திருமணம் முடிந்த பின் சரணடைய இருக்கிறான் டேனியல். அடுத்து என்ன ஆகும்? டேனியல் சரணடைந்தானா? அவன் சகோதரி திருமணம் நடைபெற்றதா?டேனியல் விடை சொல்லும்.